பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டப்பயிர் சேதம்; தடுக்க வலியுறுத்தல்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை பாதிப்பை தடுக்க, தோட்டத்தில் அறுவடை செய்து, மரத்தின் சுமையை குறைத்து, காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வேண்டும். உபரிநீர் வடிந்தபின், நடவுப்பணி செய்ய வேண்டும். காற்று வீசும் எதிர்திசையில், செடிகளுக்கு குச்சிகளால் முட்டுக்கொடுத்து, சாயாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மரங்கள் சுற்றி மண்

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை பாதிப்பை தடுக்க, தோட்டத்தில் அறுவடை செய்து, மரத்தின் சுமையை குறைத்து, காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வேண்டும். உபரிநீர் வடிந்தபின், நடவுப்பணி செய்ய வேண்டும். காற்று வீசும் எதிர்திசையில், செடிகளுக்கு குச்சிகளால் முட்டுக்கொடுத்து, சாயாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மரங்கள் சுற்றி மண் அணைத்து, மழைநீர் வடிந்த பின், பயிருக்கு ஏற்ப, மேல் உரம் இட்டு, மண் அணைக்க வேண்டும். பட்டுப்போன, காய்ந்த, மரம் அதன் கிளைகள், பசுமைக்குடில் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தோட்டப்பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள், அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X