கோவில் திருப்பணியில் முறைகேடு நடந்ததாக புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் திருப்பணியில் முறைகேடு நடந்ததாக புகார்

Added : நவ 10, 2021
Share
சேலம்: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறியதாவது: அழகிரிநாதர் கோவிலின் மூலவர் சன்னதி, அர்த்த மண்டபத்தில் இருந்த கல்வெட்டுகளை சிதைத்து, ஏற்கனவே பணி நடந்துள்ளது. ஆண்டாள் சன்னதியில், அழகிய கல் வேலைப்பாடுகளை சிதைத்து இரும்பு சங்கிலி தொங்க விடப்பட்டுள்ளது. கம்பிகளை, 'வெல்டு'

சேலம்: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறியதாவது: அழகிரிநாதர் கோவிலின் மூலவர் சன்னதி, அர்த்த மண்டபத்தில் இருந்த கல்வெட்டுகளை சிதைத்து, ஏற்கனவே பணி நடந்துள்ளது. ஆண்டாள் சன்னதியில், அழகிய கல் வேலைப்பாடுகளை சிதைத்து இரும்பு சங்கிலி தொங்க விடப்பட்டுள்ளது. கம்பிகளை, 'வெல்டு' வைத்ததோடு, நீர்நிலை அழிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு, கோவில் நிரந்தர இட்டு வைப்பிலிருந்து, 45 லட்சம் ரூபாய், இதர வகையில், 15 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். தற்போது நடக்கும் பணியில், கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை சிதைத்தது குறித்து, அரசுக்கு புகார் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X