சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி: ஈரோடு கும்பலுக்கு காப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: கருங்கல்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 35. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, புது பஸ் ஸ்டாண்டை ஒட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூன்று பேர், கார்த்திகேயனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 200 ரூபாயை பறித்தனர். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரணையில், ஈரோடு, கருங்கல்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை

சேலம்: கருங்கல்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 35. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, புது பஸ் ஸ்டாண்டை ஒட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூன்று பேர், கார்த்திகேயனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 200 ரூபாயை பறித்தனர். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரணையில், ஈரோடு, கருங்கல்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாபு, 30, சத்தியமங்கலம், வடக்குப்பட்டி நாகராஜ், 35, வீரப்பன்சத்திரம் விஜயகுமார், 31 என, தெரிந்தது. மூவரையும், கைது செய்த போலீசார், பணத்தை மீட்டனர். அதேபோல், சேலம், அம்மாபேட்டை, வையாபுரி தெருவை சேர்ந்த மகேஸ்வரி, 45, என்பவரிடம், நேற்று முன்தினம், காமராஜர் காலனி தபால் அலுவலகம் அருகே, மொபைல் போன், 550 ரூபாயை பறித்தனர். அம்மாபேட்டை போலீசார், நஞ்சம்பட்டியை சேர்ந்த பிரசாந்த், 21, சிலம்பரசன், 19, ஆகியோரை கைது செய்து, மொபைல் போன், பணத்தை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X