சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது ஆம்னி வேன் மோதல்: தந்தை - மகன் பலி; 3 பேர் படுகாயம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
தலைவாசல்: லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், தந்தை - மகன் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை, தண்டராம்பட்டை சேர்ந்தவர் ஜெயராமன், 48. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சிந்தாமணி, 45. இவர்களது மகன் வசந்தகுமார், 21, மகள் கவுரி, 17. இவர்கள், தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தனர். பண்டிக்கை முடிந்ததால், நேற்று முன்தினம்,

தலைவாசல்: லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், தந்தை - மகன் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை, தண்டராம்பட்டை சேர்ந்தவர் ஜெயராமன், 48. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சிந்தாமணி, 45. இவர்களது மகன் வசந்தகுமார், 21, மகள் கவுரி, 17. இவர்கள், தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தனர். பண்டிக்கை முடிந்ததால், நேற்று முன்தினம், குடும்பத்துடன், ஆம்னி வேனில் கோவைக்கு புறப்பட்டனர். திருவண்ணாமலையை சேர்ந்த ரஞ்சித்குமார் ஓட்டிச்சென்றார். அன்று நள்ளிரவு, 11:00 மணிக்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, தலைவாசல், பெரியேரி, எஸ்.ஆர்.எம்., பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, முன்புறம் சென்ற லாரி மீது வேன் மோதியது. அதில் வேனில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை, அங்கிருந்த மக்கள் மீட்டனர். ஆனால், ஜெயராமன், வசந்தகுமார் உயிரிழந்தனர். சிந்தாமணி, கவுரி, ரஞ்சித்குமார் ஆகியோர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X