சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கியவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய விசாரணை கைதி, சேலம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், ஓமலூர், மாட்டையாம்பட்டி, பூவான்வளவை சேர்ந்த, மாதேஸ்வரன் மகன் தனபால், 20. இவர், கடந்த மே, 1ல், அதே பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, சிறுமி கூச்சலிட்ட ஆத்திரத்தில், கல்லால் தாக்கி கொலையும் செய்தார்.

சேலம்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய விசாரணை கைதி, சேலம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், ஓமலூர், மாட்டையாம்பட்டி, பூவான்வளவை சேர்ந்த, மாதேஸ்வரன் மகன் தனபால், 20. இவர், கடந்த மே, 1ல், அதே பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, சிறுமி கூச்சலிட்ட ஆத்திரத்தில், கல்லால் தாக்கி கொலையும் செய்தார். இதுகுறித்து, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில், தனபாலை கைது செய்தனர். அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூனில் குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்ததால், ஜாமினில் வர முடியாமல் தவித்தார். இதனால், மனமுடைந்த அவர், நேற்று மதியம், 1:45 மணிக்கு, முதலாவது பிளாக் கழிப்பிட ஜன்னல் கம்பியில், துண்டை கிழித்து கயிறாக மாற்றி தூக்கிட்டுக்கொண்டார். சக கைதிகள், சிறை காவலர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்து விட்டார். அஸ்தம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X