சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., கொள்ளையர் 3 பேர் வளைப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சங்ககிரி: சங்ககிரி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்தை, கடந்த அக்., 16 இரவு, மர்ம நபர்கள் உடைக்க முயன்று முடியாமல் திரும்பினர். அவர்களை பிடிக்க, சங்ககிரி டி.எஸ்.பி., நல்லசிவம், இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் இரு தனிப்படைகளை, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் அமைத்து உத்தரவிட்டார். கடந்த, 8ல் தனிப்படையினர், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த,

சங்ககிரி: சங்ககிரி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்தை, கடந்த அக்., 16 இரவு, மர்ம நபர்கள் உடைக்க முயன்று முடியாமல் திரும்பினர். அவர்களை பிடிக்க, சங்ககிரி டி.எஸ்.பி., நல்லசிவம், இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் இரு தனிப்படைகளை, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் அமைத்து உத்தரவிட்டார். கடந்த, 8ல் தனிப்படையினர், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'ஸ்விப்ட்' காரை நிறுத்தி விசாரித்தபோது, பள்ளிபாளையம், ஆவாரங்காட்டை சேர்ந்த பூபாலன், 24, ஜெகதீஷ், 26, என்பதும், 2019ல், ஈரோட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம்.,மில் ஒரு கோடியே, 32 லட்சத்து, 74 ஆயிரத்து, 400 ரூபாய் கொள்ளையடித்ததில், முக்கிய குற்றவாளி பூபாலன் என்பதும் தெரிந்தது. மேலும், 'வெல்டிங்' வேலை செய்யும், பள்ளிபாளையம், டி.வி.எஸ்., மேடு பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், 19, என்பவரும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கார், காஸ் வெல்டிங் செட், பெயின்ட் ஸ்பிரே ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூன்று பேரும், கடந்த மாதம் குமாரபாளையத்தில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்., கொள்ளையடிக்க முயன்ற வழக்கிலும் தொடர்புடையவர்கள் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X