பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: கொரோனா தடுப்பூசி முகாம், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கமிஷனர் அருள்மொழிதேவன் தலைமையில் நடந்தது. இதில், பருவமழையின் போது, டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை குளோரின் போட்டு சுத்தப்படுத்த வேண்டும். மக்களுக்கு குளோரின் போட்டு சுத்தமான நீரை

பாப்பிரெட்டிப்பட்டி: கொரோனா தடுப்பூசி முகாம், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கமிஷனர் அருள்மொழிதேவன் தலைமையில் நடந்தது. இதில், பருவமழையின் போது, டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை குளோரின் போட்டு சுத்தப்படுத்த வேண்டும். மக்களுக்கு குளோரின் போட்டு சுத்தமான நீரை வழங்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வரும், 14ல் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து, தடுப்பூசி போட வைக்க வேண்டும். மேலும், திட்டப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில், பி.டி.ஓ., அமரவேல், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மண்டல அலுவலர் முரளிகண்ணன் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு, துணை பி.டி.ஓ.,க்கள், பொறியாளர்கள், பஞ்., செயலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X