நீர்வரத்தின்றி வரட்டாறு தடுப்பணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வரத்தின்றி வரட்டாறு தடுப்பணை

Added : நவ 10, 2021
Share
அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையிலிருந்து தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். கடந்த, சில நாட்களாக அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில்

அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையிலிருந்து தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். கடந்த, சில நாட்களாக அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தும், சித்தேரி மலைப்பகுதியில் மழை பெய்யாததால், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால், தடுப்பணை நிரம்ப வில்லை. நேற்றைய நிலவரப்படி, தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.5 அடியில், 28 அடிக்கு தண்ணீர் உள்ளது. தொடர் மழை பெய்த போதும், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து இல்லாததால், பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X