பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுடன் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

Added : நவ 10, 2021
Share
Advertisement
மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, நேற்று முன்தினம் புதிதாக ஒருவர் பொறுப்பேற்று கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்மக்கள், வி.சி., நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், பல பெற்றோர் தங்களது குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பவில்லை.

மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, நேற்று முன்தினம் புதிதாக ஒருவர் பொறுப்பேற்று கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்மக்கள், வி.சி., நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், பல பெற்றோர் தங்களது குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பவில்லை. தகவலின்படி வந்த மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன், தாசரஹள்ளி பஞ்., தலைவர் தமிழ்ச்செல்வி ரங்கநாதன் ஆகியோர், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களில் ஒருவரைத்தான் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமனம் செய்ய வேண்டும். அனைத்து பெற்றோர்களையும் வரவழைத்து அவர்களின் ஒப்புதலின்படி, தகுதியான நபரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமனம் செய்ய வேண்டும் என, பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, ஒரு சில நாட்களில், பெற்றோர் கூட்டம் நடத்தி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என, ஒன்றியக்குழு தலைவர் உறுதியளித்ததை அடுத்து, காலை, 11:30 மணிக்கு, பெற்றோர் தங்களது குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X