பொது செய்தி

தமிழ்நாடு

300 ஆண்டுகள் பழமையான போர்வாள் காட்சிக்கு வைப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், 300 ஆண்டுகள் பழமையான போர்வாள் இம்மாத சிறப்பு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரு முல்லைநில பகுதியாக இருப்பதால், கால்நடைகளுக்கான சண்டைகள் முதல், நாட்டை விரிவுபடுத்த செய்யும் பெரும் போர்கள் வரை நடந்துள்ளன. இதற்கு வில், அம்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், 300 ஆண்டுகள் பழமையான போர்வாள் இம்மாத சிறப்பு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரு முல்லைநில பகுதியாக இருப்பதால், கால்நடைகளுக்கான சண்டைகள் முதல், நாட்டை விரிவுபடுத்த செய்யும் பெரும் போர்கள் வரை நடந்துள்ளன. இதற்கு வில், அம்பு முதல், பீரங்கி வரை பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது போர் வாள். இரும்பினாலான கூரிய விளிம்பு கொண்ட நீளமான அலகு குத்துவதற்கும், வெட்டுவதற்கும் பயன்படும் ஆயுதம் வாள். கடந்த, 3,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இரும்பு காலத்துக்கும் முந்தைய வெண்கல பண்பாட்டு காலத்திலேயே வாள் தோன்றியது எனலாம். வாட்களை குறுவாள், உடைவாள் அல்லது குத்துவாள் என்றும் போர்வாள் என இரண்டு வகைகளாக பிரிப்பர். அருகில் சென்று குத்த குத்துவாளும், குதிரை மேலிருந்து சண்டையிட பட்டாக்கத்தி என்னும் போர்வாளும் பயன்படும். அண்மையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்னும் இடத்தில் நடந்த அகழாய்வில், இத்தகைய இரும்பு வாள்கள் கிடைத்துள்ளன. அவை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X