தயார் நிலையில் 47 மீட்பு மையங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் 47 மீட்பு மையங்கள்

Added : நவ 10, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர். பீலா ராஜேஷ் தலைமையில், கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி முன்னிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலுள்ள

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர். பீலா ராஜேஷ் தலைமையில், கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி முன்னிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலுள்ள பேரிடர் மீட்பு மையம் மற்றும் உணவு தயாரிக்கும் கூடங்களை ஆய்வு செய்தார். அவதானப்பட்டி படகு இல்லத்தில் தீயணைப்புத்துறையினரின் மீட்பு பணி ஒத்திகையை பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மாவட்டத்தில், 35 இடங்கள் பாதிப்பு ஏற்பட கூடியது என கண்டறியப்பட்டு, 47 மீட்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏரி, குளங்கள், நீர் நிரம்பி உடைப்பு ஏற்படாத வகையில் தடுக்க போதியளவில் மணல் மூட்டைகளும், 2,054 மீட்பு முன்கள பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X