பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையில் 5 கிலோ தங்கம் விற்பனை

Added : நவ 10, 2021
Share
Advertisement
ஈரோடு: தாமதமாக போனஸ் வழங்கியது, விவசாயத்தில் மக்கள் ஆர்வம் காட்டியதால், ஈரோடு பகுதியில், தீபாவளிக்கு ஐந்து கிலோ அளவில் தங்கம் விற்பனையானது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ் கூறியதாவது: கொரோனாவால் கடந்தாண்டு ஒட்டுமொத்த பொருட்களின் விற்பனையும் பாதித்தது. இந்தாண்டு தீபாவளிக்கு மக்கள் சற்று இயல்பு நிலை திரும்பினாலும்,

ஈரோடு: தாமதமாக போனஸ் வழங்கியது, விவசாயத்தில் மக்கள் ஆர்வம் காட்டியதால், ஈரோடு பகுதியில், தீபாவளிக்கு ஐந்து கிலோ அளவில் தங்கம் விற்பனையானது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ் கூறியதாவது: கொரோனாவால் கடந்தாண்டு ஒட்டுமொத்த பொருட்களின் விற்பனையும் பாதித்தது. இந்தாண்டு தீபாவளிக்கு மக்கள் சற்று இயல்பு நிலை திரும்பினாலும், ஜவுளி, அத்யாவசிய பொருட்களை மக்கள் அதிகம் வாங்கினர். தங்கம் மீதான மோகம் குறைந்திருந்தது. அதேசமயம் அக்.,13ல் ஒரு கிராம், 4,585 ரூபாய், 14ல், 4,530 ரூபாய், 29ல், 4,530 ரூபாய், 30ல், 4,525 ரூபாய் என விற்றது. நவ.,1, 2ல், 4,520 ரூபாய், 3ல், 4,505 ரூபாய்க்கு விற்றது. கடைசி நேரத்தில்தான் பெரும்பாலான நிறுவனங்களும் போனஸ், முன்பணம் வழங்கினர். இதன் காரணமாகவும், மாவட்டத்தில் விவசாயத்துக்கு முழு அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு, பாசனப்பணி தீவிரமாக நடந்ததாலும், தங்கம் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்தது. தீபாவளி விற்பனையாக, ஐந்து கிலோ அளவில் தங்கம் விற்பனையானது. கடந்தாண்டைவிட அதிகம் என்றாலும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், சற்று குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X