பவானிசாகர் அணையில் 10 ஆயிரம் கன அடியாக உபரி நீர் திறப்பு| Dinamalar

பவானிசாகர் அணையில் 10 ஆயிரம் கன அடியாக உபரி நீர் திறப்பு

Added : நவ 10, 2021 | |
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு, 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம் கொண்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அணை நீர்மட்டம், 103.36 அடியாக உள்ளது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு, 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம் கொண்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அணை நீர்மட்டம், 103.36 அடியாக உள்ளது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் உபரி நீர் திறப்பு, 8,000 கன அடியாக இருந்தது, நேற்று, 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரைகளை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. அதேசமயம் நேற்று அணைக்கு, 3,917 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு, 31.1 டி.எம்.சி.,யாக இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X