பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர் வரத்து, 859 கன அடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 580 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை, 859 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அதனால் தென்பெண்ணையாற்றில், 740 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வலது, இடது வாய்க்காலில்

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர் வரத்து, 859 கன அடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 580 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை, 859 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அதனால் தென்பெண்ணையாற்றில், 740 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுமாக தண்ணீர் வெளியேறிய நிலையில், ஆங்காங்கு ரசாயன நுரை தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடரும் பட்சத்தில், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X