பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி வரத்து சரிவால் விலை 2 மடங்காக உயர்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: தமிழகத்தில் பெய்யும் மழையால் தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெளி மாநில பழத்தின் வரத்தும் சரிந்ததால், சேலத்தில் ஒரே மாதத்தில் விலை இரண்டு மடங்காக உயர்ந்து, கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழத்தில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழையால், தக்காளி

சேலம்: தமிழகத்தில் பெய்யும் மழையால் தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெளி மாநில பழத்தின் வரத்தும் சரிந்ததால், சேலத்தில் ஒரே மாதத்தில் விலை இரண்டு மடங்காக உயர்ந்து, கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தமிழத்தில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழையால், தக்காளி விளைச்சல் பாதித்துள்ளது. அதே நேரத்தில், ஆந்திர மாநிலம் சிட்டிநெல்மடு, பொன்மனக்காடு, கர்நாடகா மாநிலம் கோலார் ஆகிய இடங்களில் இருந்து, தமிழக மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து சரிந்துள்ளது. இதனால், ஒரே மாதத்தில் தக்காளி விலை, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த அக்.,9ல் உழவர்சந்தைகளில், முதல் ரக நாட்டு தக்காளி கிலோ, 25 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 70 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 20 ரூபாய்க்கு விற்றது, 60 ரூபாயாக உயர்ந்தது. உயர்ரக (கிராஸ்) முதல்ரக தக்காளி, 20 ரூபாய்க்கு விற்றது, 60 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 16 ரூபாய்க்கு விற்றது, 55 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெளி மார்க்கெட்டில், நாட்டுத்தக்காளி முதல் ரகம், 30 ரூபாய்க்கு விற்றது, 80 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 25 ரூபாய்க்கு விற்றது, 70 ரூபாயாக உயர்ந்தது. உயர்ரக (கிராஸ்) முதல்ரக தக்காளி, 27 ரூபாய்க்கு விற்றது, 75 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 23 ரூபாய்க்கு விற்றது, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X