பொது செய்தி

தமிழ்நாடு

குண்டுக்கல் சங்கத்தில் ரூ.4.61 கோடி மோசடி: 3 பேர் டிஸ்மிஸ்: ரூ.10 கோடி சொத்து முடக்கம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: குண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில், 4.61 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், மூன்று பேர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். 10 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன.சேலம் மாவட்டம், ஓமலூர், குண்டுக்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் பெயரில் நகைக்கடன் வழங்கியதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக நடந்த ஆய்வில், மோசடி உறுதியானது. இதனால்,

சேலம்: குண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில், 4.61 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், மூன்று பேர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். 10 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன.


சேலம் மாவட்டம், ஓமலூர், குண்டுக்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் பெயரில் நகைக்கடன் வழங்கியதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக நடந்த ஆய்வில், மோசடி உறுதியானது. இதனால், சங்க செயலர் பழனிசாமி, 55, உதவி செயலர் பெரியசாமி, 51, முதுநிலை எழுத்தர் ரகுமணி, 49, நகை மதிப்பீட்டாளர் சேட்டு, 45, ஆகியோர், 2017 செப்., 25ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த தணிக்கையில், சங்க உறுப்பினர் பெயர்களை மோசடியாக பயன்படுத்தி, நகைகள் அடமானம் பெறாமல், போலி ஆவணம் மூலம் நகைக்கடன் வழங்கி, அதை, அசல், வட்டியுடன் வசூலித்ததாக பதிவேடுகளில் வரவு வைக்கப்பட்டது. அதற்கான தொகை, சங்கத்தில் இல்லை. அதன்படி, 172 நகைக்கடன் மூலம், ஒரு கோடியே, 96 லட்சத்து, 40 ஆயிரத்து, 250 ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே பாணியில், 119 நகைக்கடன் மூலம், 2 கோடியே, 64 லட்சத்து, 68 ஆயிரத்து, 400 ரூபாய் மோசடி நடந்துள்ளது. மொத்தம், 291 நகைக்கடன் மூலம், 4 கோடியே, 61 லட்சத்து, 8,650 ரூபாய் மோசடி நடந்துள்ளது. 2000 முதல், 2017 வரை, இந்த மோசடியை செய்துள்ளனர். 2020ல் வழங்கிய குற்ற குறிப்பாணைக்கு சரிவர பதில் அளிக்கவில்லை என்பதால், கடந்த ஆக., 5ல் பெறப்பட்ட உள் விசாரணை அறிக்கையில், குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெரியசாமி, ரகுமணி, சேட்டு ஆகியோரை, 'டிஸ்மிஸ்' செய்து, தலைவர் சரஸ்வதி உத்தரவிட்டார். இதனால், ராமமூர்த்தி நகர் சங்க செயலர் கிருஷ்ணனுக்கு, கூடுதல் பொறுப்பாக குண்டுக்கல் சங்க பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணன் கூறுகையில், ''ரகுமணி, சேட்டு, சங்க செயலர் பழனிசாமி, சங்க முன்னாள் தலைவர் ராஜகோபாலுக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. செயலர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. விரைவில் அவர் மீதும், துறை நடவடிக்கை பாயும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X