தமிழ்நாடு

கனிம வளம் வெட்டியதில் கோடிக்கணக்கில் இழப்பு: சி.பி.சி.ஐ.டி., விசாரணையால் அதிகாரிகள் கலக்கம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில் குன்று புறம்போக்கு உள்ளிட்ட அரசு நிலங்களில் அனுமதியின்றி, பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுவதாக அனுப்பப்பட்ட புகார் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிப்பதால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இப்பிரச்னை குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என, கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை

சேலம்: சேலத்தில் குன்று புறம்போக்கு உள்ளிட்ட அரசு நிலங்களில் அனுமதியின்றி, பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுவதாக அனுப்பப்பட்ட புகார் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிப்பதால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இப்பிரச்னை குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என, கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை சி.பி.சி.ஐ.டி., இயக்குனர் முகமது ஷகில் அக்தருக்கு, புகைப்படம், வீடியோ உள்ளிட்ட ஆவணங்களுடன் மனு அனுப்பினார். அதில், அக்., 31ல் செட்டிச்சாவடி, ஜாகீர் அம்மாபாளையம், வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளை பார்வையிட்டேன். குறிப்பாக, செட்டிச்சாவடி காந்தி நகர், சூரமங்கலம் கூசமலை சென்றாய பெருமாள் கோவிலுக்கு வடமேற்கு பகுதி ஆகிய குன்று புறம்போக்கில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அனுமதி பெறாமல், சில இடங்களில் பெற்ற அனுமதியை மீறி, இக்குற்றங்கள் நடந்துள்ளன. இவற்றை தடுக்க வேண்டிய கனிம வள, வருவாய்த்துறையினர், குற்றவாளிகளுக்கு ஏவலாளிகளாக பணிபுரிகின்றனர். இதனால், உள்ளூர் போலீசாரோ, இதர புலன் விசாரணை அமைப்புகளோ விசாரித்தால் கூட நியாயம் கிடைக்காது. அதனால், சி.பி.சி.ஐ.டி., சார்பில், எஸ்.பி., நிலையில், சுதந்திர, நேர்மையான குழுவை அமைத்து, 10 ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்ட இனங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், டி.ஜி.பி., உத்தரவால், சி.பி.சி.ஐ.டி., போலீசார், செட்டிச்சாவடி, கூசமலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரித்து வருவதால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


இதுகுறித்து, மனுதாரர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், 10 ஆண்டுகளில் வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், சேலம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சரியான வழியில் விசாரணை செல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X