சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அழகு நிலைய பெண் கொலை வழக்கு: சேலம் எஸ்.ஐ., உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அழகு நிலைய பெண் கொலை வழக்கு விவகாரத்தில், எஸ்.ஐ., உட்பட, நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதா உத்தரவிட்டுள்ளார்.சேலம், குமாசாமிப்பட்டியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அழகி தேஜ் மண்டல்,26; கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த கொலை குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

சேலம்: சேலம் அழகு நிலைய பெண் கொலை வழக்கு விவகாரத்தில், எஸ்.ஐ., உட்பட, நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதா உத்தரவிட்டுள்ளார்.


சேலம், குமாசாமிப்பட்டியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அழகி தேஜ் மண்டல்,26; கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த கொலை குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து கமிஷனர் நஜ்முல் ?ஹாதா உத்தவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த நிஷி,29, லுப்லு,31, ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் வங்கதேசத்தில் முகாமிட்டுள்ளதால், அவர்களை கைது செய்ய அந்நாட்டின் உதவியை தூதரகம் மூலம் கோரப்பட்டுள்ளது.தேஜ் மண்டல், நிஷி, லுப்லு ஆகியோரின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அதில், அப்போதைய அஸ்தம்பட்டி எஸ்.ஐ., ஆனந்தகுமார், எஸ்.எஸ்.ஐ., கலைச்செல்வன், சேகர், ஏட்டு மணிகண்டன் ஆகியோர் அவர்களிடம் பல மணி நேரம் மொபைல் போனில் பேசியது தெரிய வந்தது. போலீசாரே, தவறான நடவடிக்கைக்கு அனுமதி அளித்ததோடு, மாமூல் வசூலித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து துணை கமிஷனர் மாடசாமி, மோகன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். அதையடுத்து நான்கு பேரையும், நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து கமிஷனர் நஜ்முல் ?ஹாதா உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X