சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: சென்னை ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை அடுத்த கலஸ்தாம்படியை சேர்ந்தவர் காண்டீபன், 51, இவரது மகள் ராஜேஸ்வரி, ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை தேடி வந்தார். அப்போது, காண்டீபனுக்கு தன் நண்பர் ஜேப்பியார் மூலம், சென்னை வண்டலூரை சேர்ந்த சண்முகம், அவரது மனைவி சுலோச்சனா ஆகியோர் அறிமுகமாகினர்.

திருவண்ணாமலை: சென்னை ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.


திருவண்ணாமலை அடுத்த கலஸ்தாம்படியை சேர்ந்தவர் காண்டீபன், 51, இவரது மகள் ராஜேஸ்வரி, ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை தேடி வந்தார். அப்போது, காண்டீபனுக்கு தன் நண்பர் ஜேப்பியார் மூலம், சென்னை வண்டலூரை சேர்ந்த சண்முகம், அவரது மனைவி சுலோச்சனா ஆகியோர் அறிமுகமாகினர். அப்போது சண்முகம், சுலோச்சனா இருவரும், ராஜேஸ்வரிக்கு சென்னை ஏர்போர்ட்டில் ஆறு மாதத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு, 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்றனர். இதையடுத்து காண்டீபன், முதல் தவணையாக கடந்த, 2019, ஜூன், 20ல், ஆறு லட்சம் ரூபாய், சண்முகத்திடம் கொடுத்தார். மேலும், நான்கு லட்சம் ரூபாயை அடுத்த ஆறு மாதத்திற்குள் கொடுத்தார். பணம் பெற்று கொண்டு வேலையை பெற்று தராமல் ஏமாற்றி வந்தனர். கொடுத்த பணத்தை மீண்டும் காண்டீபன் கேட்டார். இதற்கு பணம் கொடுக்க இருவரும் மறுத்தனர். இது குறித்து திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசில் காண்டீபன் கொடுத்த புகார்படி, சண்முகத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுலோச்சனாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X