பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா : மின் விளக்கு, தோரணங்களால் அலங்கரிப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா களை கட்ட ஆரம்பித்துள்ள நிலையில், கோபுரங்கள் மின் விளக்குகளாலும், கோவில் வளாகம் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக வரும், 19ல்,

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா களை கட்ட ஆரம்பித்துள்ள நிலையில், கோபுரங்கள் மின் விளக்குகளாலும், கோவில் வளாகம் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக வரும், 19ல், கோவில் பின்புறம் உள்ள அருணாசலேஸ்வரர் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். வழக்கமாக விழா நாட்களில் காலை, இரவில் சுவாமி மாட வீதி உலா நடைபெறும். இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாட வீதியில் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில், ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி உலா நடைபெற உள்ளது. சுவாமி உலாவின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைக்கும் பணி மற்றும் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழாவின் போது பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திருக்கல்யாண மண்டபத்தில், பல்வேறு வண்ண வண்ண துணிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. மேலும், 20 கி.மீ., தூரம் தெரியும் வரை, கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று விழா இனிதே நடக்க வேண்டி விநாயகர் உற்சவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X