சென்னை: மழைக்காலம் முடிந்த உடன், நிரந்தரமாக சேதாரம் இல்லாத சென்னையை உருவாக்குவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை ஸ்டாலின் 4வது நாளாக ஆய்வு செய்தார். தி.நகர் விஜயராகவா சாலையில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், மாம்பல் கால்வாய் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக ப ணிகளை செய்திருக்கிறார்கள். அதனால் தான் தி.நகரில் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கிறது என்கிறார்கள். அதையும் பார்த்துவிட்டுத்தான் மத்திய அரசிடம் நிவாரணம் கோர முடியும்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணி நடந்து வருகிறது. மேயர், துணை முதல்வர் பதவியில் இருந்தபோதே மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்தேன். தற்போது முதல்வராக மழை பாதிப்பை ஆய்வு செய்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு எதுவும் செய்யவில்லை. ஆட்சிமாற்றம் காரணமாக கடந்த 6 மாதங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் 50 முதல் 60 சதவித பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியுள்ளது. அதை, இந்த மழைக்காலம் முடிந்தவுடன் அதையும் செய்து நிரந்தரமாக சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம்.
மழைகாலம் என்பதால் ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கும் தேவையான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து, கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வேண்டுகோள்
ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தேன்.
இருநாட்களுக்கு #RedAlert விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். pic.twitter.com/euJlS3tFy9
— M.K.Stalin (@mkstalin) November 10, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE