டிரக் மோதியதில் எரிந்தது பஸ்: 12 பேர் கருகி பலியான பரிதாபம்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பஞ்சபத்ரா என்ற இடத்தில் டிரக் - பஸ் மோதியதை தொடர்ந்து பஸ் தீப்பிடித்தது. அதில் 12 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.36 பேருடன் ஜோத்பூர் நோக்கி அதிவேகமாக வந்த பஸ் மீது, தவறான பாதையில் வந்த டிரக் மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதில் 12 பேர் தீயில் கருதி உயிரிழந்தனர். 22 பேருக்கும் மேற்பட்டவர்கள்
டிரக் மோதியதில் எரிந்தது பஸ்: 12 பேர் கருகி பலியான பரிதாபம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பஞ்சபத்ரா என்ற இடத்தில் டிரக் - பஸ் மோதியதை தொடர்ந்து பஸ் தீப்பிடித்தது. அதில் 12 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

36 பேருடன் ஜோத்பூர் நோக்கி அதிவேகமாக வந்த பஸ் மீது, தவறான பாதையில் வந்த டிரக் மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதில் 12 பேர் தீயில் கருதி உயிரிழந்தனர். 22 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


latest tamil news




உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
11-நவ-202105:36:30 IST Report Abuse
N Annamalai சோகம் .தேசிய நெடுஞ்சாலையில் எப்படி திசை மாறி வந்தார்கள் ?.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-நவ-202104:02:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பிரதமர் நிவாரண நிதி வேற, பீயெம் கேர்ஸ் வேற. பீயெம் கேர்ஸ்சில் சொந்த செலவுக்கு, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி எதிர்கட்சி ஆட்சிகளை கவுக்குறதுக்கு.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-நவ-202100:02:01 IST Report Abuse
மலரின் மகள் விபத்துக்கள் நடப்பதை குறைக்க முயலவேண்டும். முன்கூட்டியே அறிய முடியாதது விபத்துக்கள். ஆனால் எச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்லபடுத்தவேண்டும். விபத்து நடைபெறும் பகுதி என்று என்றோ எழுதிய பலகையை அதுவும் உள்ளூர் மொழியில் பெயிண்ட் சுரண்டி போன நிலையில் வைத்து விட்டு வெளிமாநில ஓட்டுனர்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் வைத்து விட்டு கடைமை முடிந்தது என்று திருப்தியோடு செல்லும் அதிகாரிகளோ நம்மவர்கள்? விபத்துக்கள் நடந்தால் பஸ்ஸோ காரோ எதற்காக தீப்பற்றி எரிகிறது? காரணம் அறியாதவர்களா உற்பத்தியாளர்கள்? விபத்தின் பொது தீப்பற்றி எரியாத அளவிற்கு பாதுகாப்பு மிக்க வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்யவேண்டுவதுடன், அவ்வாறில்லாத வாகனங்களை எதற்காக பயணிகளை ஏற்றி செல்ல அனுமதியல்கிறார்கள். தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், விபத்தினால் உடைந்த கிழிந்தோ விடாத எரிபொருள் டேங்கள் மட்டுமே பொறுத்த அனுமதிக்கவேண்டும். உயிர் என்பது விலைமதிக்க வியலாதது. முழுமையாக வாழ்ந்து விட்டு கடைமையாற்றிவிட்டு தான் விண்ணுலகம் செல்லவேண்டும். பாதுகாப்பை பலப்படுத்துவோம் அதை உறுதியும் படுத்துவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X