சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒய்வு பெற்ற பெண் தபால் அதிகாரி வங்கிக் கணக்கில் ரூ 6. 50 லட்சம் திருட்டு

Added : நவ 10, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுாரில், ஓய்வு பெற்ற பெண் தபால் அதிகாரி வங்கி கணக்கில் இருந்து 6. 50 திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் முரளிதரன், 65. அவர் மனைவி வசந்தகுமாரி, 61. இவர் ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. இவர் மகன் மதன், லண்டனில் பணியாற்றி வருகிறார்.இதனால் அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தை வேலுார் ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கி

வேலுார்:வேலுாரில், ஓய்வு பெற்ற பெண் தபால் அதிகாரி வங்கி கணக்கில் இருந்து 6. 50 திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் முரளிதரன், 65. அவர் மனைவி வசந்தகுமாரி, 61. இவர் ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. இவர் மகன் மதன், லண்டனில் பணியாற்றி வருகிறார்.இதனால் அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தை வேலுார் ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கி கிளையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமித்து வைத்திருந்தார்.

கடந்த மாதம் 28 ம் தேதி வசந்தகுமாரி மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.அதில் தாங்கள் இதுவரை வங்கி கணக்கில் பான் கார்டை இணைக்காததால் பணம் எடுக்க முடியாது என கூறி ஒரு லிங்க்கை அனுப்பி தகவல் தெரிவிக்கும்படி கூறியள்ளனர்.அந்த லிங்கை ஓப்பன் செய்து அதில் தனது கணக்கு விவரங்களை வசந்தகுமாரி பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு போன் செய்த நபர் உங்கள் தகவல் தவறு, நாங்கள் ஓடிபி நம்பர் அனுப்புகிறோம், அதை தெரிவித்தால் பான் கார்டை இணைத்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

இதனால் ஓடிபி நம்பரை கூறிய சில நிமிடங்களில், வசந்தகுமாரியின் கணக்கில் இருந்து 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கியை தொடர்பு கொண்ட போது, அவர்கள் போன் செய்யவில்லை என கூறினர்.இது குறித்து வேலுார் சைபர் கிரைம் போலீசில் அவர் இன்று புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த ஆறு மாதத்தில் 212 பேர் இது போல பணத்தை ஏமாந்துள்ளனர்.வங்கி விவரங்களை போனில் யாராவது கேட்டால் கொடுக்க கூடாது. பணம் எடுப்பது தெரியவந்தால் 155260 என்ற எண்ணுக்கு உடனடியாக தெரிவித்தால் எடுக்கப்பட்ட பணத்தை மீட்டு விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X