செல்லாது, செல்லாது!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

செல்லாது, செல்லாது!

Added : நவ 10, 2021
Share
செல்லாது, செல்லாது!'கட்சி நடத்துகின்றனரா; நாடக கம்பெனி நடத்துகின்றனரா என தெரியவில்லை' என, கட்சி மேலிட தலைவர்கள் மீது ஆவேசமாக குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல்

அக்கம் பக்கம்


செல்லாது, செல்லாது!



'கட்சி நடத்துகின்றனரா; நாடக கம்பெனி நடத்துகின்றனரா என தெரியவில்லை' என, கட்சி மேலிட தலைவர்கள் மீது ஆவேசமாக குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்ததுa.திரிணமுல் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தவர்கள் எல்லாம் மீண்டும் தாய் கட்சிக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே திரிணமுல் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ரஜீப் பானர்ஜி, பா.ஜ.,வுக்கு தாவியதும், மம்தா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார். இதனால் கடுப்பான மம்தா, தேர்தல் பிரசாரத்தின் போது, 'ரஜீப் போன்ற ஊழல் கறை படிந்த மனிதரை இதற்கு முன் பார்த்ததே இல்லை' என்றார். இந்த ரஜீப், சமீபத்தில் மீண்டும் திரிணமுல் கட்சியில் ஐக்கியமாகி விட்டார்.
இந்த விவகாரம், கட்சியின் உண்மையான விசுவாசிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'ரஜீப் பானர்ஜியும், ஊழலும் உடன் பிறந்தவர்கள் எனக் கூறி விட்டு, இப்போது அதே ஊழல் நபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பது நியாயமா...' என, கொதிக்கிறார் கல்யாண் பானர்ஜி. 'தேர்தல் நேரத்தில் பேசியது இப்போது செல்லாது. இப்படி கணக்கு போட்டால் கட்சி நடத்த முடியாது' என சிரிக்கின்றனர், மம்தாவுக்கு நெருக்கமானவர்கள்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X