சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'பெப்பே' காட்டும் தமிழக அரசு!என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக, பெட்ரோல் விலையை 1 லி.,க்கு 5 ரூபாயும்; டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, மத்திய அரசு.தற்போது பெட்ரோல் விலை 106 ரூபாயில் இருந்து, 101 ரூபாயாக குறைந்து உள்ளது; டீசல் விலை 102 ரூபாயில் இருந்து 92 ரூபாயாகக்


'பெப்பே' காட்டும் தமிழக அரசு!



என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக, பெட்ரோல் விலையை 1 லி.,க்கு 5 ரூபாயும்; டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, மத்திய அரசு.தற்போது பெட்ரோல் விலை 106 ரூபாயில் இருந்து, 101 ரூபாயாக குறைந்து உள்ளது; டீசல் விலை 102 ரூபாயில் இருந்து 92 ரூபாயாகக் குறைந்துள்ளது.மேலும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதால், புதுச்சேரி உட்பட சில மாநில அரசுகள் தங்களது வரியை
குறைத்துள்ளன; இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைந்துள்ளது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசலில் 4 ரூபாயும் குறைக்கப்படும்' என குறிப்பிடப்பட்டது.ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் மட்டுமே குறைத்தது; டீசல் விலையை குறைக்கவில்லை.'பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின; இதோ இப்போது, மத்திய பா.ஜ., அரசு குறைத்து விட்டது.
ஆனால் சொன்னதை செய்யாத தி.மு.க., அரசை எதிர்த்து, காங்கிரஸ், கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்துமா? செய்யாது; ஏனெனில் அக்கட்சிகளுக்கு, மக்கள் நலனை விட, அதிகாரத்தில் இருப்போரின் தயவு தான் தேவை!'சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்; சொல்லாததையும் செய்வோம்' என கலர் கலராக, 'ரீல்' விடுவதில் தி.மு.க.,வினர் அசகாய சூரர்கள்! சொன்னதை ஏன் செய்யவில்லை எனக் கேட்டால், 'வாக்குறுதி நிறைவேற்ற தேதி குறிப்பிட்டோமா?' என திருப்பி கேட்டு நம்மை முட்டாளாக்குவர், தி.மு.க., அமைச்சர்கள்.
'விடியல் வரும்' என நம்பியோருக்கு, 'பெப்பே' காட்டுகிறது தி.மு.க., அரசு!


தி.மு.க.,வின்குறுக்குவழிபுத்திசாலித்தனம்!



ரா.கணேசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை மாநகராட்சி, 2018ம் ஆண்டு சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியது. 169ம் வார்டில் உள்ள என் வீட்டிற்கு, அரையாண்டு சொத்து வரி, 320 ரூபாயில் இருந்து 2,850 ரூபாயாக உயர்ந்தது. அதன்படி 2019 ஏப்ரலில், மூன்று அரையாண்டுகளுக்கும் சேர்த்து 8,000 ரூபாய் வரி செலுத்தினேன்.இதற்கிடையில் அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க., இந்த சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.அப்போது, இன்றைய அமைச்சர் சுப்பிரமணியன் சொன்னது என்னவென்றால், 'நீதிமன்றம் சொன்னது என்பதற்காக சொத்து வரி உயர்வு தேவையில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், 3,558 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்கும். அதை பயன்படுத்தி நிதித் தேவையை பூர்த்தி செய்யலாம்'
என்றார்.அன்றைய அ.தி.மு.க., அரசு, எதிர்க்கட்சியின் பிரசாரத்திற்கும், தேர்தலுக்கும் பயந்து, வரி உயர்வை நிறுத்தி வைத்தது.இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் நான் செலுத்திய வரியில் 7,500 ரூபாய் பற்று இருப்பதாகச் சொல்லி ரசீது அளித்தனர்; அந்த தொகை இருக்கும் வரை, வரி கட்ட தேவையில்லை என்றனர்.ஆனால் தற்போது, மாநகராட்சியிடம் இருந்து எனக்கு 700 ரூபாய் சொத்து வரி பாக்கி இருப்பதாக ஒரு குறுஞ்செய்தி வந்தது.வரி விபரத்தை பார்த்த போது, 2020 - 2022ம் ஆண்டுகளுக்கு 8,200 ரூபாய் சொத்து வரி நிர்ணயித்துள்ளனர் என்பது தெரிய வந்தது.இதிலிருந்து அறியப்படுவது என்னவெனில், எந்த சொத்து வரி உயர்வை தி.மு.க., எதிர்த்ததோ, அந்த வரி உயர்வை, அதுவும் அ.தி.மு.க., ஆட்சி காலமான 2020 ஏப்ரல் முதல், 2021 மார்ச் வரையிலான இரண்டு அரையாண்டு காலத்திற்கும் சேர்த்து வசூலித்து இருக்கிறது என்பது தான். அதுவும் அவர்கள் சொன்ன உள்ளாட்சி தேர்தல்
நடக்கும் இந்த தருவாயில்.முதல்வர், அமைச்சர், மாநகராட்சி ஆணையர் என யாரும் இந்த சொத்து வரி உயர்வு குறித்து, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இது போன்ற விஷயங்களை, மக்கள் தாமாக தெரிந்து கொள்ளட்டும் என்பது தான், தி.மு.க., அரசின் அணுகுமுறையாக இருந்தது; இருக்கிறது; எதிர்காலத்திலும் இருக்கும்.தி.மு.க.,வின் இந்த சந்தர்ப்பவாதம் மற்றும் குறுக்குவழி புத்திசாலித்தனத்தை, எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.வாழ்வதற்கு தேவையான வசதிகளை பெற, மாநகராட்சி அவ்வப்போது நியாயமாக உயர்த்தும் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், மக்களுக்கு முதலில் ஆசை காட்டி, பின் ஏமாற்றும் தி.மு.க.,வின் பாணி, வேறு யாருக்கும் சுட்டுப் போட்டாலும் வராது.


பிச்சையெடுக்காமல்என்ன செய்வான்?



கு.நாகராஜ், சக்கம்பட்டி, தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நலத்திட்டங்களுக்கு பெரும் தொகையை ஒதுக்கியும், பிச்சைக்காரர்கள் அதிகரிக்கின்றனர். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் மற்றும் பிச்சை எடுப்பதை தடுக்கும் சட்டம் கடுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதி, எந்த பிச்சைக்காரர்களின் கைகளுக்கு செல்கிறது என்பது, நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.மக்கள் நலத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, ஆளுங்கட்சியின் அமைச்சர், மாவட்ட செயலர் முதல் வார்டு செயலர் வரை, 'கமிஷன்' என்ற பெயரில் அரசு தொகை கொள்ளையடிக்கப்படுகிறது.நலத்திட்டங்களை வாரி வழங்கும் வள்ளல் போல, ஆளுங்கட்சி செயல்படுவதற்கு காரணம் என்ன? அதில் கிடைக்கும் கமிஷன் தொகையால், தன் கட்சியினரை குபேரனாக்கும் வாய்ப்புக்காக தான்!
அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து குவித்துள்ளனர் என்பது, 'ரெய்டு' மூலம் தெரிய வருகிறது. ஆனால், ஒரு அயோக்கியன் கூட துாக்கில் போடப்பட்டதில்லையே ஏன்?'நலத்திட்டம் என்று தானே சொன்னோம்; யார் நலம் என்று சொன்னோமா... காலவரைவறை ஏதும் கொடுத்தோமா...' என, அரசியல்வாதிகள் கேள்வி கேட்கின்ற காலம் இது!மொத்தத்தில் சட்டமும், திட்டமும் சரியில்லாமல் போனால், சாமானியன் பிச்சையெடுக்காமல் வேறென்ன செய்வான்?

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-நவ-202119:41:44 IST Report Abuse
D.Ambujavalli சந்தேகம் இல்லாமல் 'நலத்திட்டங்கள்' கொள்ளையடிக்க மட்டும்தான் உதவும். பின்னே, 'தலைவா.....' என்று கூறிக்கொண்டு வரும் கீழ்மட்டத் தொண்டர்களுக்கா செல்லும்? அவர்களுக்கு ஏதாவது மாநாடு, கூட்டம் என்று பிரியாணி, குவார்ட்டர் போதாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X