பொது செய்தி

தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக மாறியது

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த மண்டலமாக மாறியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது:வங்கக்கடலில் உருவாகிஉள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த மண்டலமாக மாறியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது:வங்கக்கடலில் உருவாகிஉள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே தென்கிழக்கில் 430 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் - ஸ்ரீஹரிஹோட்டா இடையே நாளை (நவ.11) மாலை கரையை கடக்கும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்யும்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அமைச்சர் ஆய்வு
முன்னதாக மழை நிலவரம் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் , உயரதிகாரிகளுடன் இன்று (நவ.10) ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X