பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 10, 2021
Share
Advertisement
நவம்பர் 11, 1911தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகில் உள்ள சாலியமங்கலத்தில் 1911 நவ., 11ல் பிறந்தவர், டி.பி.ராஜலட்சுமி. இவருக்கு 8வது வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணை கொடுமையால், பிறந்த வீட்டுக்கே வந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபாவில் இணைந்து நடித்தார்.கடந்த 1917ல் வெளியான கீசகவதம் என்ற தமிழ் சினிமாவின் முதல் மவுனப் படத்தில் நடித்தார். காளிதாஸ் என்ற தமிழின் முதல்


இதே நாளில் அன்று


நவம்பர் 11, 1911



தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகில் உள்ள சாலியமங்கலத்தில் 1911 நவ., 11ல் பிறந்தவர், டி.பி.ராஜலட்சுமி. இவருக்கு 8வது வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணை கொடுமையால், பிறந்த வீட்டுக்கே வந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபாவில் இணைந்து நடித்தார்.
கடந்த 1917ல் வெளியான கீசகவதம் என்ற தமிழ் சினிமாவின் முதல் மவுனப் படத்தில் நடித்தார். காளிதாஸ் என்ற தமிழின் முதல் பேசும் படத்திலும் நடித்தார். தன்னுடன் நடித்த டி.வி.சுந்தரத்தை திருமணம் செய்து கொண்டார்.'ராஜலட்சுமி ஸ்ரீராஜம் டாக்கீஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, மிஸ் கமலா என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதி, கதாநாயகியாக நடித்து, இவரே இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குனர் என்ற பெருமை பெற்றார். மொத்தம் 14 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 'விமலா, சுந்தரி' உள்ளிட்ட சில நாவல்கள் எழுதிஉள்ளார். 1964ல், தன் 53வது வயதில் காலமானார்.
'சினிமா ராணி' டி.பி.ராஜலட்சுமி பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X