பொது செய்தி

இந்தியா

பெரும் பணக்காரர் ஆனார் 'நைக்கா' பல்குனி நாயர்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : அழகு, ஆரோக்கியம், பேஷன் சம்பந்தபட்ட பொருட்களை, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்துவரும் 'நைக்கா' நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, அதன் நிறுவனரான பல்குனி நாயரின் சொத்து மதிப்பு 48 ஆயிரத்து, 100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நைக்கா பிராண்டின் தாய் நிறுவனமான 'எப்.எஸ்.என். இ காமர்ஸ் வெஞ்சர்ஸ்' புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து, அதன் பங்குகள் நேற்று
பெரும் பணக்காரர் ஆனார்  'நைக்கா' பல்குனி நாயர்

புதுடில்லி : அழகு, ஆரோக்கியம், பேஷன் சம்பந்தபட்ட பொருட்களை, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்துவரும் 'நைக்கா' நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, அதன் நிறுவனரான பல்குனி நாயரின் சொத்து மதிப்பு 48 ஆயிரத்து, 100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நைக்கா பிராண்டின் தாய் நிறுவனமான 'எப்.எஸ்.என். இ காமர்ஸ் வெஞ்சர்ஸ்' புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து, அதன் பங்குகள் நேற்று சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதையடுத்து இந்நிறுவனப் பங்குகள் விலை 96 சதவீதம் வரை அதிகரித்தது.இதன் காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் இந்நிறுவனத்தின் நிறுவனரான பல்குனி நாயரின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.


latest tamil news


இதனையடுத்து, புளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, பல்குனி நாயர், இந்தியாவில் சுயமாக முன்னுக்கு வந்த பணக்கார பெண்களில் முதலிடத்தைபெற்றிருக்கிறார். பல்குனி நாயர், தன்னுடைய 50வது வயதில் கடந்த 2012ல் நைக்கா 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை ஏற்படுத்தினார்.இதையடுத்து, இந்நிறுவனம் அழகு சம்பந்தமான பொருட்களின் சில்லரை விற்பனையில் முன்னணிக்கு வந்தது.பங்குகள் விலை நேற்று அதிகரித்ததை அடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ௧ லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-202118:51:14 IST Report Abuse
சம்பத் குமார் 1). பாராட்டுக்கள்.‌ 2). தாங்கள் தேர்ந்து எடுத்த துறை நல்ல வளர்ச்சி விகிதத்தில் எப்பொழுதும் சென்று கொண்டு இருக்கும் துறைத்தான். மேன்மேலும் வெற்றிகரமாக அமைவதற்கு வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
11-நவ-202112:31:48 IST Report Abuse
raja வாழ்த்துக்கள் சகோதரி ....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
11-நவ-202112:31:13 IST Report Abuse
raja அய்யய்யோ... இங்க உள்ள உடன்பிறப்புக்கள் இத பத்தி கருத்து சொல்றேங்னு தப்பால்ல பேசுவானுவோ .... மோடியின் கார்போரேடு பாசமுன்னு சொல்லுவானுவோ இந்த உண்டிக்குளிக்கி கம்மிகள் கூட சேர்ந்து........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X