வாகன விபத்தை தவிர்க்க ரோடு விரிவுபடுத்துங்க!| Dinamalar

வாகன விபத்தை தவிர்க்க ரோடு விரிவுபடுத்துங்க!

Added : நவ 10, 2021
Share
வால்பாறை: குறுகலான ரோடுகளை விரிவுபடுத்த வேண்டும் என, வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், ரோடு வசதி மேம்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொள்ளாச்சி ரோடு சீரமைக்கப்படுகிறது.ஆழியாறில் இருந்து வால்பாறை வரை உள்ள ரோடுகளில் பல இடங்களில், கடந்த ஆண்டு பெய்த மழையினால் ஏற்பட்ட

வால்பாறை: குறுகலான ரோடுகளை விரிவுபடுத்த வேண்டும் என, வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், ரோடு வசதி மேம்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொள்ளாச்சி ரோடு சீரமைக்கப்படுகிறது.ஆழியாறில் இருந்து வால்பாறை வரை உள்ள ரோடுகளில் பல இடங்களில், கடந்த ஆண்டு பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை சீரமைக்கும் பணி நடக்கிறது.இந்நிலையில், வால்பாறை நகரிலிருந்து சோலையாறுடேம், சின்கோனா, கருமலை செல்லும் ரோடுகள் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தாமல் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இதே போல், வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X