மோசமான ரோடால் விபத்து அபாயம்: நகராட்சி அலட்சியத்தால் அதிருப்தி

Added : நவ 10, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி - கள்ளிப்பாளையம் ரோட்டில், பெரிய குழியில் மழைநீர் தேங்கி நிற்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி - கள்ளிப்பாளையம் ரோட்டினை, அண்ணா நகர், சுப்பையா நகர், கே.ஆர்.ஜி.பி., நகர் குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் கள்ளிப்பாளையம் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த வழித்தடத்தில், ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன
 மோசமான ரோடால் விபத்து அபாயம்:  நகராட்சி அலட்சியத்தால் அதிருப்தி



பொள்ளாச்சி: பொள்ளாச்சி - கள்ளிப்பாளையம் ரோட்டில், பெரிய குழியில் மழைநீர் தேங்கி நிற்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி - கள்ளிப்பாளையம் ரோட்டினை, அண்ணா நகர், சுப்பையா நகர், கே.ஆர்.ஜி.பி., நகர் குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் கள்ளிப்பாளையம் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த வழித்தடத்தில், ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். பல்லடம் ரோட்டில் இருந்து, கள்ளிப்பாளையம் செல்லும் ரோடு சந்திப்பு பகுதியில் பெரிய குழிகள் உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:பல்லடம் ரோட்டில் இருந்து, கள்ளிப்பாளையம் செல்லும் ரோடு சந்திப்பு பகுதியில் ரோட்டின் நடுவே பெரிய குழியாக உள்ளது. அதில், மழைநீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. கவனமின்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.ரோட்டிலுள்ள குழியை மூட பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நகராட்சியின் அலட்சியத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர்.மேலும், பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி மையமாக இந்த இடம் மாறியுள்ளது. இதனால், தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளது. அதிகாரிகள் மனம் வைத்து, விபத்து ஏற்படுத்தும் வகையில், ரோட்டில் உள்ள குழியை மூட உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.


ரோடு போடுவாங்களா?

அண்ணா நகரில் இருந்து, கள்ளிப்பாளையம் செல்லும் ரோட்டில் ஜல்லிக்கற்கள் பரப்பி, ஆறு மாதங்களுக்கு மேலாகியது.இன்னும் தார் ரோடு போடவில்லை. கற்கள் நிறைந்த பாதையில் செல்வதால் வாகன ஓட்டுனர்கள் தடுமாறுகின்றனர்.வாகனங்கள் பழுதாவதால் ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். வாக்கிங் செல்வோர் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. ஜல்லிக்கற்களை பரப்பிய அதிகாரிகள், ரோடு அமைக்க மனது வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X