சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருக்கல்யாண உற்சவம்; பக்தர்கள் தரிசனம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
- நிருபர் குழு -கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவில், கோவில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழா கடந்த, 5ம் தேதி துவங்கியது. கடந்த, 8ம் தேதி முருகப்பெருமான் வேல் வாங்கும் உற்சவமும், நேற்றுமுன்தினம் கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.இந்நிலையில், நேற்று காலை பக்தர்கள் அனுமதியின்றி

- நிருபர் குழு -

கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவில், கோவில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழா கடந்த, 5ம் தேதி துவங்கியது. கடந்த, 8ம் தேதி முருகப்பெருமான் வேல் வாங்கும் உற்சவமும், நேற்றுமுன்தினம் கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.இந்நிலையில், நேற்று காலை பக்தர்கள் அனுமதியின்றி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்தார். திருக்கல்யாணம் முடிந்ததும், பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நெகமம், காளியப்பம்பாளையத்திலுள்ள தங்கவேல் அய்யன் வேலாயுதசுவாமி கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, தேர் திருவீதியுலா நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நடந்தது. நேற்று மதியம், 1:30 மணிக்கு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மணக்கோலத்தில் சுவாமிகள் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.உடுமலைஉடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள, சுப்ரமணிய சுவாமி சன்னதியில், சூரசம்ஹார விழா, 4ம் தேதி, சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம், கோவில் வளாகத்தில், முருகப்பெருமான், வேல் வாங்கும் உற்சவம், சூரசம்ஹாரமும் நடந்தது.விழாவில் நேற்று, காலை, 10:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது.முத்தையாபிள்ளை லே-அவுட் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X