துளிகள் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 10, 2021
Share
Advertisement
உபகரணங்கள் வழங்கும் விழாகோவை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மையத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த விழாவுக்கு, வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர் ஸ்வப்னா, பகல்நேர பாதுகாப்பு மைய

உபகரணங்கள் வழங்கும் விழாகோவை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மையத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த விழாவுக்கு, வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர் ஸ்வப்னா, பகல்நேர பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் சத்திய மூர்த்தி தலைமை வகித்தனர்.சிபி சேர்,வாக்கர் உள்ளிட்ட பல்வேறு வகையான உபகரணங்கள், 24 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சிறப்பாசிரியர்கள், இயன்முறை டாக்டர், பகல்நேர பாதுகாப்பு மைய ஆசிரியர், உதவியாளர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.அரசுக்கு பி.எம்.எஸ்., நன்றிபொள்ளாச்சியில் நடந்த பி.எம்.எஸ்., (பாரதிய மஸ்துார் சங்கம்) கூட்டத்தில், சங்க நிறுவனரை கவுரவித்து தபால் தலை வெளியிடும் அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.பி.எம்.எஸ்., தொழிற்சங்கத்தை துவங்கி, தேசம் தழுவிய பெரிய சங்கமாக உருவாக்கி, சங்கத்துக்கு அரசு அங்கீகாரத்தை பெற்று, உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்தவர் தந்தோபாத் தெங்கிடி.அவரது, 101வது பிறந்த நாளில், அவரை கவுரவிக்கும் விதமாக, மத்திய அரசு அவரின் உருவம் தாங்கிய தபால் தலை வெளியிடுகிறது. இதற்கு, பொள்ளாச்சி பி.எம்.எஸ்., சார்பில் கூட்டம் நடத்தி,அரசுக்கு நன்றிதெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில், சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் ஆதித்யன், அமைப்புச் செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், மாவட்ட தலைவர் கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.குறை கேட்க இடம் தர்றோம்பொள்ளாச்சி எம்.பி., வால்பாறை எம்.எல்.ஏ,ஆகியோர் மக்கள் குறைகளை கேட்க வந்தால், மா.கம்யூ., கட்சி அலுவலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம், என, மா.கம்யூ., கட்சியின் தாலுகா பொதுசெயலாளர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை, 'வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் இருவரும், மக்களை நேரடியாக சந்தித்து அலுவலகத்தில் குறைகள் கேட்பதில்லை.எம்.எல்.ஏ.,வுக்கு அலுவலகம் இருந்தும் திறந்து பயன்படுத்துவதில்லை. எம்.பி.,க்கு மக்கள் குறைகேட்க அலுவலகம் இல்லாத நிலையில், அவரும் மக்கள் குறைகள் கேட்பதில்லை.மக்கள் குறைகள் கேட்க இடமில்லை என்றால், வால்பாறை நகரில் உள்ள மா.கம்யூ., அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்கலாம். மக்கள் குறைகளை கேட்க வந்தால், மா.கம்யூ., கட்சி அலுவலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்,' என, தெரிவித்துள்ளார்.பழங்குடியினருக்கு நிவாரணம்வால்பாறை அடுத்துள்ள வெள்ளிமுடி, கீழ்பூனாஞ்சி, காடம்பாறை ஆகிய செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, பழங்குடியின மக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.அவர், பேசுகையில், ''பழங்குடியினமக்களின் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படும். குறிப்பாக, தெருவிளக்கு, ரோடு, குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா, குடிநீர் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் மயில்கணேஷ், துணை செயலாளர் பொன்கணேஷ், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பூச்செடிகள் நடவு செய்த மாணவியர்தமிழகத்தில், ஒன்று முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளிக்கு வந்த மாணவர்கள், உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டனர்.நீண்ட நாட்களுக்கு பின், மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளதால், அவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படுவதை தடுக்க, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகின்றன.ராகல்பாவி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவ, மாணவியர் பூச்செடிகளை நடவு செய்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:கதை, பாடல், உரையாடல், நாடகம் மற்றும் பாட இணைச் செயல்பாடுகள் தரப்பட்டு, பள்ளி மாணவர்கள், வகுப்பறை சூழலுக்கு தயார் படுத்தப்படுகின்றனர்.அவ்வகையில், பள்ளிக்கு புதிதாக வருகை புரிந்துள்ள ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள், தேசிய பசுமைப்படை சார்பில் பூச்செடிகளை நட்டனர். செடிகளை பராமரிப்பதும் அவற்றை பாதுகாப்பதும் மாணவர்களின் செயல்பாடாக தரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கிராம வளர்ச்சி பயிலரங்குஉடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரியில் செயல்படும், 'உன்னத் பாரத் அபியான்' திட்டம் சார்பில், ஜிலேபிநாயக்கன்பாளையத்தில் இரண்டு நாட்கள் நடந்த கிராம வளர்ச்சி பயிலரங்கிற்கு, முதல்வர் ராஜேஸ்வரி, தலைமை வகித்தார்.முதல் நாளில், கால்நடை மருத்துவக்கல்லுாரி உடற்கூடறியல் துறைத்தலைவர் குமாரவேல், கால்நடை வளர்த்தல் குறித்து பேசினார். இதேபோல், இரண்டாவது நாளில், ஸ்ரீ அம்பாள் தென்னை நர்சரி உரிமையாளர் கார்மேகம், தென்னை மரங்களின் பராமரிப்பு, இயற்கை உரங்களின் பயன்கள், சந்தைபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் மெெஹர்பானு, உறுப்பினர்கள் சாரதாமணி, விஜயா, ராஜேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மின்நுகர்வோர் கவனத்திற்குபூளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர், செப்., மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே இம்மாதம் செலுத்தலாம்.உடுமலை கோட்டம், பூளவாடி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நிர்வாக காரணங்களால், நவ., மாதத்திற்கு உண்டான மின் கணக்கீட்டு பணி மேற்கொள்ளப்படவில்லை.எனவே, மின் நுகர்வோர், செப்., மாதத்தில் செலுத்திய மின் கட்டணத்தையே இம்மாதம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இத்தகவலை, உடுமலை மின்பகிர்மான செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்உடுமலை தாலுகா அலுவலகம் முன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாசில்தார் விவேகானந்தன், தலைமை வகித்தார்.இதில், சட்டசபை தேர்தலுக்கான செலவினங்களை விரைந்து வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், துணை கலெக்டர் நிலையில் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பணியிடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் தலைவர் தயானந்தன்,தேர்தல் துணைத்தாசில்தார் சாந்தி, தலைமையிடத்து துணைத்தாசில்தார் சுப்ரமணியம் மற்றும் உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X