கோஹ்லி மகளுக்கு மிரட்டல் ஐதராபாத் இன்ஜினியர் கைது

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (6)
Advertisement
ஐதராபாத் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் 10 மாத மகளுக்கு சமூக வலைதளத்தில் பலாத்கார மிரட்டல் விடுத்த, ஐதராபாதை சேர்ந்த 'சாப்ட்வேர்' இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 'டி ௨௦' உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த மாதம், நடந்த போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா
 கோஹ்லி, மகளுக்கு, பலாத்கார மிரட்டல் ,விடுத்த இளைஞன், கைது!

ஐதராபாத் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் 10 மாத மகளுக்கு சமூக வலைதளத்தில் பலாத்கார மிரட்டல் விடுத்த, ஐதராபாதை சேர்ந்த 'சாப்ட்வேர்' இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 'டி ௨௦' உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.


latest tamil newsகடந்த மாதம், நடந்த போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. இது, இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.பலரும் இந்திய அணியையும், கேப்டன் கோஹ்லியையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அவருடைய 10 மாத மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்து ஒருவர் பதிவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்து கைது செய்ய, டில்லி போலீசாருக்கு பெண்கள் கமிஷன் உத்தரவிட்டது. விசாரணைக்குப் பின் கோஹ்லியின் குழந்தைக்கு பலாத்கார மிரட்டல் விடுத்தது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான ராம்நாகேஷ் அலிபதினி, 23 என, தெரிய வந்தது.
இதையடுத்து, ராம்நாகேஷை மும்பை போலீசார் கைது செய்து, மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-202110:57:29 IST Report Abuse
SUBBU- MADURAI இவன உள்ள வச்சு ரத்தம் வர்ற வரைக்கும் கடவாய்லயே குத்தணும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-நவ-202123:46:07 IST Report Abuse
மலரின் மகள் மனதின் அழுக்காறு ஆண்களுக்கு சற்று கூடுதலாக இருக்கிறதா என்ன? மேதகு மஹான்கள் வாழ்ந்த வாழ்கின்ற பாரதம் நம்முடையது. உலகின் உயர்ந்தவர்கள் எல்லாம் பெண்மை என்றும் தாய் என்றும் போடுறம் தேசம் நமது தேசம். சாரதா தேவி, புத்தன் காந்தி வள்ளலார் சங்கரர் ராமானுஜர் எல்லோரும் அவதரித்த புண்ணிய தேசம். இந்த தேசத்தில் தான் எனோ தெரியவில்லை, தனக்கு பிடிக்காதவரை ஏசுவதற்கு அவரின் தாய் , தமைக்கையையே வயது வித்தியாசம் பார்க்காமல் கேவலமாக காமுகியாக திட்டுவார்கள். பெண்களுக்கு இதில் சம்பந்தமே இருக்காது. வசைச்சொல் சொல்வதற்கு நாக்கு அஞ்சாது என்றால் அது பெண்களை வசைபாடுவதற்கு மட்டுமே என்று சொல்லும் வகையில் இருக்கிறது. எவ்வளவு தான் தாயையும் தமக்கையையும் கேவலமாக அசிங்கமாக திட்டினாலும் ஒருவர் பெட்ரா மகளை திட்டுவது என்பது நாம் அறியாதது. இழிபிறப்புக்கள் நாட்டில் பிறந்து விடுவது இயற்கையின் பிறழ்வு எனலாம். பத்து மாத குழந்தை, உண்மையில் தெய்வம் வந்து கொஞ்சி விளையாடும் வயது அது. ஒரு வயது பூர்த்தி அடையாத அனைத்து குழந்தைகளுடனும் காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் தெய்வங்கள் வந்து கொஞ்சி விளையாடுமாம். மழலை வளரும் வீட்டில் தெய்வம் வாசம் செய்யும் என்பார்கள். நமது வாழ்வின் தாத்பரியங்களாக மஹான்கள் சொல்லி சென்றது அவை. கோஹ்லி விளையாட்டில் சிறப்பாக ஒன்றில் இல்லை என்பதற்கு அவரின் மழலையை வன்புணர்ச்சிக்கொள்வேன் என்று ஏசுவது எழுதுவதற்கும் கேட்பதற்கும் நெஞ்சம் கோபம் கொள்ள செய்கிறது. பெயர் ராம்நாகேஷ் அலி பதினி யாம். திருட்டு கணக்கில் எழுதி இருப்பான் என்று தெரிகிறது. மருத்துவர்கள் மருத்துவ தர்மம் பிறழ்ந்தால், மருத்துவ அங்கீகாரம் ரத்து செய்யப்படும், அதுபோலவே இவனது சாப்ட்வேர் இன்ஜினீரிங் பட்டத்தை ரத்து செய்யவேண்டும், மேலும் அந்த தொழிலுக்கு எந்த நிறுவனங்களும் இவனை பணியில் நியமனம் செய்யக்கூடாது என்று செய்யவேண்டும். தொழிற்கல்வி பயின்றோரும் பட்டம் வாங்கும் பொது உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள். தாங்கள் பயின்ற படிப்பை தொழிலை தவறாக பயன்படுத்தமாட்டேன் என்று. சாப்ட்வேர் பயின்றவர் அதை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். தகுதி நீக்கம் செய்வதற்கும் படித்த படிப்பு செல்லாது என்று சொல்லவும் தார்மீகத்தில் உரிமையுண்டு.
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
11-நவ-202111:18:02 IST Report Abuse
meiமிக சரியான கருத்து...
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
11-நவ-202111:19:05 IST Report Abuse
meiஇந்த மிருகத்தை பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, ...யைப் போக்கவேண்டும்...
Rate this:
Cancel
10-நவ-202123:31:36 IST Report Abuse
Raghasrin He must be jailed for 10 years
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X