தாமதமான அறிவிப்பு தடுமாறிய பெற்றோர்| Dinamalar

தாமதமான அறிவிப்பு தடுமாறிய பெற்றோர்

Added : நவ 10, 2021
Share
அன்னூர்: தாமதமான அறிவிப்பால், மாணவர், பெற்றோர் அவதிக்குள்ளாகினர்.வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, நேற்று கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்தார். கலெக்டர் அறிவிப்பு காலை, 8:40 மணிக்கே மக்களுக்கு தெரிய வந்தது. இதற்குள் அன்னூர் வட்டாரத்தில், பெரும்பாலான பள்ளிகளுக்கு, மாணவ, மாணவியர் வந்து விட்டனர்.அலைச்சலுக்கு ஆளான பெற்றோர் கூறுகையில், 'பள்ளி

அன்னூர்: தாமதமான அறிவிப்பால், மாணவர், பெற்றோர் அவதிக்குள்ளாகினர்.வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, நேற்று கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்தார். கலெக்டர் அறிவிப்பு காலை, 8:40 மணிக்கே மக்களுக்கு தெரிய வந்தது.
இதற்குள் அன்னூர் வட்டாரத்தில், பெரும்பாலான பள்ளிகளுக்கு, மாணவ, மாணவியர் வந்து விட்டனர்.அலைச்சலுக்கு ஆளான பெற்றோர் கூறுகையில், 'பள்ளி விடுமுறை என்பது காலை, 8:45 மணிக்குதான் தெரியவந்தது. அதற்குள் பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் விட்டுவிட்டு வீடு திரும்பிவிட்டனர். தகவல் தெரிந்து, மீண்டும் இரண்டாவது முறையாக அரை மணி நேரத்திலேயே பள்ளிக்கு சென்று அழைத்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள, 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பல ஆயிரம் மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். விடுமுறை குறித்த அறிவிப்பை காலை, 6:00 மணிக்குள் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டால் அவதி இருக்காது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X