செய்தி செய்தி

தமிழ்நாடு

பட்டா திருத்த சிறப்பு முகாம் 31 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே நடந்த, பட்டா திருத்த சிறப்பு முகாமில், 58 மனுக்கள் பெறப்பட்டு, 31 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.காரமடையை அடுத்த சிக்காரம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சிவகுமாரி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் தாசில்தார்

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே நடந்த, பட்டா திருத்த சிறப்பு முகாமில், 58 மனுக்கள் பெறப்பட்டு, 31 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.காரமடையை அடுத்த சிக்காரம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சிவகுமாரி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா முன்னிலையில், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடம், பட்டாவில் எண் திருத்தம், பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வருவாய்த் துறையினர் பெற்றனர். அப்போது, 58 மனுக்கள் பெறப்பட்டு, 31 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் மலர்மணி மற்றும் வருவாய் அலுவலர்கள் பங்கேற்றனர்.


120 விண்ணப்பங்கள்

பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது. இதில், 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தவிர, ஆன்லைன் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சிறிய அளவிலான பிழை திருத்தங்கள் உடனடியாக, அதே இடத்தில் சரி செய்யப்பட்டு வழங்கப்பட்டன.வருவாய் துறையினர் கூறுகையில்,'பெரிய அளவிலான பிழை திருத்தங்கள் கள பரிசோதனைக்கு பின்னரே திருத்தம் செய்து வழங்கப்படும். பட்டா திருத்தம் தவிர, முதியோர் உதவித்தொகை என அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கோரி, பலரும் விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X