செய்தி செய்தி

தமிழ்நாடு

அன்னூரில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுாரில் நடந்த பட்டா திருத்த சிறப்பு முகாமில், 268 பேர் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு அளித்தனர்.ஒவ்வொரு வாரமும், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அனைத்து தாலுகாக்களிலும் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அன்னுார் பேரூராட்சியில் நேற்று நடந்த முகாமில், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் முருகேசன் மக்களிடம் மனுக்களை பெற்றார்.

அன்னுார்:அன்னுாரில் நடந்த பட்டா திருத்த சிறப்பு முகாமில், 268 பேர் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு அளித்தனர்.ஒவ்வொரு வாரமும், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அனைத்து தாலுகாக்களிலும் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அன்னுார் பேரூராட்சியில் நேற்று நடந்த முகாமில், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் முருகேசன் மக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், சொக்கம்பாளையம், குமாரபாளையம், செல்லனுார், அல்லிகுளம், சாணாம்பாளையம், குன்னத்துாராம்பாளையம் பகுதியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.முகாமில், இலவச வீட்டு மனை பட்டா கோரி, 268 மனுக்கள் பெறப்பட்டன. இத்துடன் சிறு பிழைக்காக, 18 மனுக்களும், திருத்தங்களுக்காக, 58 மனுக்களும் பெறப்பட்டன. ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இரண்டு மனுக்கள், முதியோர் உதவித் தொகை கோரி, 10, நத்தம் பட்டா மாற்றம் செய்ய கோரி, 21 என, 377 மனுக்கள் நேற்று பெறப்பட்டன.இதில், நான்கு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 40 மனுக்களுக்கு உடனே உத்தரவுகள் வழங்கப்பட்டன. 333 மனுக்களுக்கு விசாரணைக்கு பிறகு உத்தரவு வழங்கப்படும் என, தாசில்தார் சிவக்குமார் தெரிவித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரங்கராஜன், வருவாய் ஆய்வாளர் சங்கர்லால், வி.ஏ.ஓ., தாமரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X