பொது செய்தி

இந்தியா

ஆப்கனிலிருந்து பயங்கரவாதம் பரவும் அபாயம்! இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் கவலை

Updated : நவ 12, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :'ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கையில் சிக்கியுள்ளதால், அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பயங்கரவாதம் பரவும் அபாயம் உள்ளது. இந்த சவாலை அனைவரும் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்' என, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், 20 ஆண்டுகளுக்குப் பின், தலிபான் பயங்கரவாதிகள் கையில்
ஆப்கன், பயங்கரவாதம், அபாயம், இந்தியா  கவலை

புதுடில்லி :'ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கையில் சிக்கியுள்ளதால், அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பயங்கரவாதம் பரவும் அபாயம் உள்ளது. இந்த சவாலை அனைவரும் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்' என, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், 20 ஆண்டுகளுக்குப் பின், தலிபான் பயங்கரவாதிகள் கையில் மீண்டும் சிக்கியுள்ளது. தலிபான் அரசுக்கு பாகிஸ்தான், சீனா என இரு நாடுகள் மட்டுமே ஆதரவு கரம் நீட்டியுள்ளன. 'பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாற அனுமதிக்க கூடாது' என, தலிபான்களை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கன் நிலமையால் பிராந்திய பாதுகாப்புக்கு எற்பட்டுள்ள சவால்கள் தொடர்பான கூட்டத்தை இந்தியா நேற்று நடத்தியது.


ஆலோசனைடில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் நடந்த இந்தக் கூட்டத்தில் ரஷ்யா, ஈரான், மத்திய ஆசியாவை சேர்ந்த தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன.இதில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை வகித்து பேசியதாவது:இந்த கூட்டத்தை நடத்துவது, இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. ஆப்கனில் நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்த மாற்றங்கள், அந்நாட்டு மக்களை மட்டும் அல்லாமல், இந்த பிராந்தியம் மற்றும் அண்டை நாடுகளையும் பாதிக்கும்.

இந்த நேரத்தில் நமக்கிடையே ஆலோசனை, ஒத்துழைப்பு, கருத்து பரிமாற்றம் ஆகியவை முக்கியம். நமது ஆலோசனை ஆக்கப் பூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும், ஆப்கன் மக்களுக்கும் உதவும் வகையிலும் இருக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார். கஜகஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தலைவர் கரிம் மசிமோவ் பேசுகையில், ''ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கவலை கொள்ள செய்து உள்ளன. ஆப்கனில் சமூக மற்றும் பொருளாதார சூழல் சீரழிந்துள்ளது. அந்நாடு பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது,'' என்றார். ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி ஷம்கனி பேசுகையில், ''ஆப்கனில் அகதிகள் பிரச்னை உருவாகி உள்ளது. அங்கு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்குவதால் மட்டுமே தீர்வு காண முடியும்,'' என்றார்.


எதிர்கொள்ள வேண்டும்ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பட்ருஷேவ் பேசுகையில், ''ஆப்கன் நிலைமை பற்றி, ரஷ்யா தான் முதலில் இருந்தே ஆலோசித்து வருகிறது. ''இது தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டத்தையும், ரஷ்யாதான் நடத்தியது. ஆப்கன் நிலைமை கவலையளிக்கிறது. ஆப்கனில் அமைதி ஏற்பட, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.கூட்டத்தக்குப் பின், எட்டு நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:தலிபான்களிடம் சிக்கிஉள்ள ஆப்கனிலிருந்து மற்ற நாடுகளுக்கு பயங்கரவாதம் பரவும் அபாயம் உள்ளது பற்றி, எட்டு நாடுகளும் கவலை தெரிவித்து உள்ளன. இந்த சவாலை, அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

'பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, ஆப்கன் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. 'பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு, அடைக்கலம் தரக் கூடாது; பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யக் கூடாது' என, தலிபான் ஆட்சியாளர்களை எட்டு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன. ஆப்கனில் சமூக, பொருளாதார நிலை கவலையளிக்கிறது. அங்கு உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில், தேவையான உதவிகளை செய்ய எட்டு நாடுகளும் வலியுறுத்தின.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியுடன் சந்திப்புடில்லியில் நடந்த பேச்சில் பங்கேற்ற ஏழு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள், பிரதமர் மோடியை நேற்று மாலை சந்தித்தனர். இந்த சந்திப்பில், நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் ஷர்ஷ் வர்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சில் விவாதிக்கப்பட்ட விபரங்களை, பிரதமர் மோடிக்கு அவர்கள் தெரிவித்தனர். ஆப்கன் பிரச்னையில் தங்கள் நாட்டின் நிலையையும் தெரிவித்தனர்.


சீனாவின் வஞ்சகம்டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் நடந்த பேச்சில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை, பாகிஸ்தானும், சீனாவும் புறக்கணித்தன.'பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த பேச்சில் பங்கேற்க முடியவில்லை' என சீன தெரிவித்திருந்தது.இந்நிலையில் ஆப்கன் நிலைமை பற்றி விவாதிக்க, பாகிஸ்தான் இன்று இஸ்லாமாபாதில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இதில் பங்கேற்கப் போவதாக சீனா நேற்று அறிவித்தது. இந்தப் பேச்சில் அமெரிக்கா, ரஷ்யாவை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்பர் என எதிர்பார்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-நவ-202121:17:52 IST Report Abuse
Natarajan Ramanathan ... நாடுகளுக்கு கவலை இல்லை. இசுலாமிய பயங்கரவாதிகளோ அல்லது அகதிகளோ வேறு நல்ல நாடுகளுக்கு இடம் பெயர்ந்து அங்கே பன்றிமாதிரி பல்கி பெருகி அதையும் துலுக்க நாடாக மாற்றுவதே அவர்களது ஒரே குறிக்கோள்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
11-நவ-202118:24:08 IST Report Abuse
sankar தாலிபான்களை ஒரு பொருட்டாக மதிக்க தேவை இல்லை
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
11-நவ-202115:44:00 IST Report Abuse
John Miller நம்ம ஜி காஷ்மீரில் பண்ணாத அட்டூழியமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X