பொது செய்தி

தமிழ்நாடு

வரையரை செய்யப்பட்ட போது முறைகேடு நடந்துள்ளதாக புகார்

Added : நவ 10, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் எருமப்பட்டி பேரூராட்சியில் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் வார்டு வரைவு பட்டியல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதை மாற்ற வேண்டும் என கூறி, தி.மு.க., பேரூர் துணை செயலாளர் கணேசன், செயல் அலுவலருக்கு மனு கொடுத்துள்ளார்.

எருமப்பட்டி: நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் எருமப்பட்டி பேரூராட்சியில் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் வார்டு வரைவு பட்டியல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதை மாற்ற வேண்டும் என கூறி, தி.மு.க., பேரூர் துணை செயலாளர் கணேசன், செயல் அலுவலருக்கு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சியில் பேரூராட்சி வார்டு வரையரை செய்ததில் முறையாக இருந்த தெருக்கள் மற்றும் வார்டுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எருமப்பட்டி ஐயர் மேடு முதல் கை காட்டி, பேருந்து நிலையம் வரை, 2 கி.மீ. தூரம் உள்ள பகுதியை ஒரே வார்டாக அமைத்துள்ளதால் மக்கள் அதிர்ச்சிடைந்துள்ளனர். 15 ஆண்டுகளாக உள்ள பெண்கள் வார்டை ஆண்கள் வார்டாக மாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X