மக்கள் விழிப்புணர்வு பிரசாரம்: காங்., தீவிரம்

Updated : நவ 12, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை மையமாக வைத்து, வரும் 14ம் தேதி முதல் மத்திய அரசிற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.இதுகுறித்து, காங்., பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடிப்பத் தேவைகள் உட்பட அனைத்து விஷயங்களிலும், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்கள் விழிப்புணர்வு பிரசாரம், காங்., தீவிரம்

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை மையமாக வைத்து, வரும் 14ம் தேதி முதல் மத்திய அரசிற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காங்., பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடிப்பத் தேவைகள் உட்பட அனைத்து விஷயங்களிலும், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளில் உள்ள தோல்விகளே காரணம்.காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை விண்ணை நோக்கி செல்கிறது. இதன்வாயிலாக மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது உறுதியாகிறது. இதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள காங்., முடிவு செய்துள்ளது.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கும் பாதயாத்திரை, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெறும். இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் 14ம் தேதி துவங்கி, 29 ம் தேதி முடிவுக்கு வரும். அடுத்ததாக, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.அப்போது மக்கள் பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் திரண்டு, இரு அவைகளிலும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார் - நமது டில்லி நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-நவ-202121:18:02 IST Report Abuse
S. Narayanan மக்கள் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டு இருக்கிறார்கள். இது தெரியாத முட்டாள் காங்கிரஸ் போராட்டம் நடத்த ஜாதகம் பார்க்கிறது. இப்படி ஒரு கட்சி நமக்கு தேவையா.
Rate this:
Cancel
11-நவ-202118:26:37 IST Report Abuse
ராஜா ஏதாவது செய்யுங்க அப்போதான் உங்களைப்பற்றி மக்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-நவ-202115:11:35 IST Report Abuse
Kasimani Baskaran கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாகிவிட்டது தொடர்ந்து காங்கிரஸ் முழித்திருக்கும் பொழுதே கண்ணை பிடுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. கண்ணை நோண்டி எடுத்துவிட்ட பின்னர் எப்படி விழிப்புணர்வை ஏற்ப்படுத்த முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X