பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் இடிந்த வீட்டில் மூதாட்டி உயிருடன் மீட்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
ப.வேலூர்: மழையால் இடிந்த வீட்டில் இருந்து, மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார். ப.வேலூர் தாலுகாவுக்குட்பட்ட ஒழுகூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியம், 71; கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த இவர், தனியாக மண் சுவர் கொண்ட கூரை வீட்டில் வசித்து வருகிறார். தற்போது வடகிழக்கு பருவமழையின் தீவிர தாக்கத்தால், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ப.வேலூர்: மழையால் இடிந்த வீட்டில் இருந்து, மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார். ப.வேலூர் தாலுகாவுக்குட்பட்ட ஒழுகூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியம், 71; கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த இவர், தனியாக மண் சுவர் கொண்ட கூரை வீட்டில் வசித்து வருகிறார். தற்போது வடகிழக்கு பருவமழையின் தீவிர தாக்கத்தால், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பாக்கியம் நேற்று இரவு, 7:30 மணியளவில் தனியாக வீட்டில் இருந்தபோது அப்போது பெய்த மழையில் கரைந்த மண் சுவர்கள், ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழ தொடங்கின. அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேரிடர் மீட்பு குழுவினருடன் சென்ற டி.எஸ்.பி., ராஜாரணவீரன் தலைமையிலான குழுவினர் மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். மேலும் பேரிடரில் மீட்கப்பட்ட மூதாட்டி பாக்கியத்திற்கு நிவாரண நிதி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மூதாட்டி பாக்கியம் மற்றும் பகுதிவாசிகள் கேட்டுக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X