பொது செய்தி

தமிழ்நாடு

கந்தசஷ்டி திருவிழா: முருகன் கோவிலில் வழிபாடு

Added : நவ 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* நாமக்கல், காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை கணபதி பூஜையுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை, தங்கக்கவச அலங்காரம் நடந்தது. மாலை சந்தன காப்பு அலங்காரமும், இரவு

நாமக்கல்: கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* நாமக்கல், காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை கணபதி பூஜையுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை, தங்கக்கவச அலங்காரம் நடந்தது. மாலை சந்தன காப்பு அலங்காரமும், இரவு முருகப் பெருமான் சூரசம்ஹாரம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.


* நாமக்கல் கடைவீதி சக்திவிநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி, ராஜஅலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார்.


* நாமக்கல், துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டிவர் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது.


* நாமக்கல் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கருங்கல்பாளைம், கரையான்புதூர் கருமலை, தண்டாயுதபாணி கோவில்களிலும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது.


* நாமக்கல் - திருச்சி சாலை, பொன்விழா நகர், கற்பக விநாயகர் கோவிலில் தண்டாயுதபாணிக்கு அபி ?ஷகம் செய்யப்பட்டது.


* வள்ளிபுரத்தில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியருக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது.


* நாமக்கல் மாருதி நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில் உள்ள கல்யாண சுப்ரமணியர் சுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபி?ஷகம் நடந்தது.


* சேந்தமங்கலம் அடுத்த தத்தகிரி முருகன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X