வேகமாக வளர்கிறது இந்தியா: நிதியமைச்சக அறிக்கையில் தகவல்

Updated : நவ 12, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி :உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னோக்கி செல்வதாக, நிதியமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.மத்திய நிதியமைச்சகத்தின், மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:விரைவாக தடுப்பூசி போடப்படுவது, உற்சாகமான பண்டிகை காலம் ஆகியவை, இந்தியாவின் தற்போதைய பொருளாதார மீட்சியை துாண்டும் வகையில்
வளர்கிறது, இந்தியா,    அறிக்கை, தகவல்

புதுடில்லி :உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னோக்கி செல்வதாக, நிதியமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின், மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:விரைவாக தடுப்பூசி போடப்படுவது, உற்சாகமான பண்டிகை காலம் ஆகியவை, இந்தியாவின் தற்போதைய பொருளாதார மீட்சியை துாண்டும் வகையில் அமைந்துள்ளன.
இதன் காரணமாக, வினியோக பிரசனைகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறையும் என எதிர்பார்க்கலாம்.
பெரிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டம் நாட்டின் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வாயிலாக, வணிக வாய்ப்புகளும், செலவழிக்கும் வழிகளும் அதிகரித்துள்ளன.சீர்திருத்த நடவடிக்கைகள், உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை ஊக்குவித்தல், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டம், தேவையை அதிகரிப்பது, நுகர்வை அதிகரிப்பது ஆகியவற்றின் வாயிலாக, பொருளாதார மீட்சியின் வேகம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.ஜனவரி மாதம் வெளியான, நிதியமைச்சகத்தின் 'பொருளாதார ஆய்வு 2020 - 21'ல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 11 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
12-நவ-202117:59:33 IST Report Abuse
PKN திருந்திட்டானாம் யார் சொன்னது அவனே சொன்னான்
Rate this:
Cancel
Karthik - Chennai,இந்தியா
11-நவ-202119:00:19 IST Report Abuse
Karthik இப்போதைக்கு முன்னேற வழி இல்லை... தானாக முன்னேறினால் நிர்மலா சீதாராமன் அங்கு இருக்க மாட்டார் ...ஜீ பேரை எடுத்து கொள்வார் ...
Rate this:
Cancel
TAMILAN - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-நவ-202115:14:30 IST Report Abuse
TAMILAN வளரும் ஆனா வளராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X