பொது செய்தி

தமிழ்நாடு

காளிபட்டி கந்தசாமி கோவிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹாரவிழா கோலாகலமாக நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் கந்தசாமி எனும்பெயரில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற, முருகன் கோவிலில் கடந்த, 4ல் தீபாவளியன்று, கொடியேற்றத்துடன் சூரசம்ஹார விழா தொடங்கியது. நேற்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, தங்ககவசத்தில் மூலவர் அருள்பாலித்தார். மாலை, 5:00 மணிக்கு முக்கிய

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹாரவிழா கோலாகலமாக நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் கந்தசாமி எனும்பெயரில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற, முருகன் கோவிலில் கடந்த, 4ல் தீபாவளியன்று, கொடியேற்றத்துடன் சூரசம்ஹார விழா தொடங்கியது. நேற்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, தங்ககவசத்தில் மூலவர் அருள்பாலித்தார். மாலை, 5:00 மணிக்கு முக்கிய நிகழ்வான முருகன் பல்வேறு வடிவங்களில் தோன்றிய சூரனை வதம்செய்யும் வகையில், கோவில் அருகே சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. இன்று மாலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண வைபவ உற்சவவிழா நடக்க உள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்கள் நிலங்களில் விளைவித்த நிலக்கடலையை சுவாமி மீது தூவி வழிபட்டனர்.

* அதேபோல், வையப்பமலை குன்றின்மீது அமைந்திருக்கும் சுப்ரமணியசுவாமி கோவிலில், பல்வேறு அபி?ஷக ஆராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X