பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்கும்படி கோரிக்கை

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:'பயிர்களுக்கான காப்பீட்டு தேதியை நீட்டிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி ஆகியோருக்கு, டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் அனுப்பிய கடிதம்:டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டில் குறுவை சாகுபடி இயல்பை காட்டிலும் அதிகம் நடந்தது. ஆனால்,

சென்னை:'பயிர்களுக்கான காப்பீட்டு தேதியை நீட்டிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி ஆகியோருக்கு, டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் அனுப்பிய கடிதம்:டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டில் குறுவை சாகுபடி இயல்பை காட்டிலும் அதிகம் நடந்தது. ஆனால், நெல் கொள்முதலை குறித்த நேரத்தில் துவக்காததால், சாகுபடி செலவிற்கு பணமின்றி விவசாயிகள், சம்பா சாகுபடியை குறித்த காலத்தில் துவங்கவில்லை.

நடவு பணிகள் பல இடங்களில் முடியாத நிலையில், பயிர் காப்பீடு செய்ய, 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2020ல் நவ., 30 வரை பயிர் காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், டிச., 15 வரை பயிர் காப்பீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது பயிர் காப்பீடு கால அவகாசம் குறைக்கப்பட்டு உள்ளது.

வயல்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, காப்பீடு செய்யும் கால அவகாசத்தை, நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்.கடந்தாண்டு பயிர் காப்பீடு கட்டணமாக 3,173 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இதில், இழப்பீடாக 1,597 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இதன் வாயிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு 1,597 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. ஆனால், கடன் வாங்கி சாகுபடி செய்த பல மாவட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X