பொது செய்தி

தமிழ்நாடு

குமரன் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த, பேளுக்குறிச்சியில் உள்ள குமரன் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேந்தமங்கலம் அடுத்த, பேளுக்குறிச்சியில் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எட்டிக்குட்டைக்கு கிழக்கு பழனியப்பர் கோவில் அடிவாரத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி, 25 அடி ஆழம் தோண்டி

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த, பேளுக்குறிச்சியில் உள்ள குமரன் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேந்தமங்கலம் அடுத்த, பேளுக்குறிச்சியில் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எட்டிக்குட்டைக்கு கிழக்கு பழனியப்பர் கோவில் அடிவாரத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி, 25 அடி ஆழம் தோண்டி குமரன் ஏரி புதியதாக உருவாக்கப்பட்டது. கொல்லிமலை, பேளுக்குறிச்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்த காரணத்தால், கொல்லிமலை பைல்நாடு பகுதியில் இருந்து கழுார் ஆற்றின் வழியாக வரும் தண்ணீர், குமரன் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இந்த உபரி நீர் பேளுக்குறிச்சி வழியாக தாண்டாகவுண்டனூர் ஏரிக்கு சென்றடைகிறது. இதனால் பேளுக்குறிச்சி, பழனியப்பர் கோவில், எட்டிக்குட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிளில் உள்ள விவசாய கிணற்றின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, 1,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள மஞ்சள், வாழை, மரவள்ளி கிழங்கு பயிர்கள் செழிப்பாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X