பொது செய்தி

தமிழ்நாடு

மோகனூர் காவிரி கரையோர பகுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
மோகனூர்: தொடர் மழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் மழையால் மேட்டூர் அணை தற்போது, அதன் கொள்ளளவை எட்ட உள்ளது. அதனால் அணையில் இருந்து, 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன் அளவு மேலும் அதிகாரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் ஆர்.டி.ஓ.,

மோகனூர்: தொடர் மழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் மழையால் மேட்டூர் அணை தற்போது, அதன் கொள்ளளவை எட்ட உள்ளது. அதனால் அணையில் இருந்து, 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன் அளவு மேலும் அதிகாரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் ஆர்.டி.ஓ., மஞ்சுளா, மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட நஞ்சை இடையாறு, மணப்பள்ளி, மோகனூர், ஒருவந்தூர் உள்ளிட்ட காவிரிக்கரையோர பகுதிகளுக்கு, நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மழை, வெள்ளம் அதிகம் வந்தால் பொது மக்கள் தங்குவதற்காக, ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவில் திருமண மண்டபம் தயார் நிலையில் உள்ளது. அவற்றை பார்வையிட்ட ஆர்.டி.ஓ., அங்கு, போதுமான வசதி இருப்பதை உறுதி செய்தார். தாசில்தார் சண்முகவேலு, ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

* சேலம் சரக டி.ஐ.ஜி., மகேஸ்வரி நேரில் வந்து, குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் தெரு, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.


* ப.வேலூர் தாலுகா, சோழசிராமணியில் இருந்து அனிச்சம்பாளையம் வரையிலான காவிரி கரையோர பகுதி மக்கள், மீனவர்களிடம் டி.எஸ்.பி.,ராஜாரணவீரன் கூறியதாவது: பரிசல்களை இயக்கவும், துணிமணிகளை துவைக்கவும், கால்நடைகளை மேய்க்கவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் உதவியை நாடுவதற்காக நடமாடும் இருசக்கர ரோந்து வாகனம், மாவட்ட எஸ்.பி., உத்தரவுப்படி செயல்பட்டு வருகிறது. எனவே மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X