பொது செய்தி

தமிழ்நாடு

காவலன் செயலி: டி.ஜி.பி., அறிவுரை

Updated : நவ 12, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:பெண்கள் அவசர காலங்களில், காவல் உதவிக்காக, 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.'பெண்கள் தனியாக ஆட்டோவிலோ, கார்களிலோ பயணம் செய்யும் முன், அந்த வாகனத்தின் பதிவு எண்ணை, 99697 77888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். 'காவல் துறை அந்த வாகனத்தை, ஜி.பி.ஆர்.எஸ்., வாயிலாக கண்காணிக்கும். இந்த தகவலை அனைத்து
காவலன் செயலி: டி.ஜி.பி., அறிவுரை

சென்னை:பெண்கள் அவசர காலங்களில், காவல் உதவிக்காக, 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

'பெண்கள் தனியாக ஆட்டோவிலோ, கார்களிலோ பயணம் செய்யும் முன், அந்த வாகனத்தின் பதிவு எண்ணை, 99697 77888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். 'காவல் துறை அந்த வாகனத்தை, ஜி.பி.ஆர்.எஸ்., வாயிலாக கண்காணிக்கும். இந்த தகவலை அனைத்து தளங்களிலும் பகிரவும்' என்ற தகவல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற தகவல் தவறானது என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.அவர் கூறியதாவது:பெண்கள் அவசர காலங்களில், காவல் உதவிக்காக, 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

இச்செயலியில் உள்ள, எஸ்.ஓ.எஸ்., பட்டனை அழுத்துவதன் வாயிலாக, தங்களுடைய இருப்பிடம் ஜி.பி.ஆர்.எஸ்., வாயிலாக அறியப்பட்டு, உடனடி சேவை வழங்கப்படும். இச் செயலியில் உள்ள, 'ஷேக் டிரிக்கர்' வசதியை பயன்படுத்தியும், காவல் துறையின் உதவியை பெற இயலும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
11-நவ-202122:05:04 IST Report Abuse
Nagercoil Suresh பெண்களின் பாதுகாப்பிற்கு டி.ஜி.பி யின் முயற்சி பாராட்டிற்குரியது. மேற்கத்திய நாடுகளில் அவசர அழைப்புகளுக்கு ஒரே எண்ணை 911 வைத்துள்ளார்கள், போன் பண்ணிய உடன் அவர்கள் கேட்பது போலீஸ், fire, ஆம்புலன்ஸ் எது உடனடி தேவையோ அதை உடனே அனுப்பி விடுவார்கள் ஆனால் இங்கு நூறிலிருந்து நூற்றிப்பத்து வரை ஒன்னுவிடாமல் அனைத்தையும் வைத்து மக்களை ஒரு குழப்பு குழப்பி விட்டுள்ளார்கள், இரண்டிற்கும் அதிக பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பெயரைச்சொல்லி அழைப்பதற்கு குழம்புவதுபோல...
Rate this:
Cancel
11-நவ-202107:29:12 IST Report Abuse
Srirajan Cbe Please don't repeat
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X