சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி; மூன்று பேர் கைது

Added : நவ 10, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: இரண்டு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சங்ககிரி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த, 16ல் கொள்ளையடிக்க வந்த நபர்கள் கேமராவில் ஸ்ப்ரே பெயின்ட் அடித்தனர். காஸ் வெல்டிங் வைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். இது குறித்து வங்கி மேலாளர் ரித்திஷ்குமார் சங்ககிரி போலீசில்

குமாரபாளையம்: இரண்டு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சங்ககிரி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த, 16ல் கொள்ளையடிக்க வந்த நபர்கள் கேமராவில் ஸ்ப்ரே பெயின்ட் அடித்தனர். காஸ் வெல்டிங் வைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். இது குறித்து வங்கி மேலாளர் ரித்திஷ்குமார் சங்ககிரி போலீசில் புகார் செய்தார். சேலம் எஸ்.பி.ஸ்ரீஅபினவ் உத்தரவுபடி, சங்ககிரி டி.எஸ்.பி. நல்லசிவம், இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த, 8ல் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வாகன தணிக்கை செய்த போது, ஈரோட்டில் இருந்து வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதிலிருந்த பள்ளிபாளையத்தை சேர்ந்த பூபாலன், 24, ஜெகதீஸ், 26, ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரிக்க இந்த வழக்கின் குற்றவாளிகள் என தெரியவந்தது. இவர்கள் மூலம் காஸ் வெல்டிங் செய்து வரும் முகமதுரியாஸ், 19, என்பவரையும் போலீசார் பிடித்தனர். இவர்களிடம் விசாரணை செய்ததில், கடந்த, 22ல் குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்திலும், 16ல் சங்ககிரி இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்திலும் கொள்ளையடிக்க முயற்சித்ததும் இவர்கள்தான் என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஸ்விப்ட் கார், காஸ் வெல்டிங் கிட், ஸ்ப்ரே பெயின்ட் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X