சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிசி குடோனில் திருடிய சட்டீஸ்கர் மாநிலத்தவர் 9 பேர் கைது

Added : நவ 10, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, அரிசி குடோனில் இருந்து பணத்தை திருடிய சட்டீஸ்கர் மாநில கொள்ளையர்கள் ஒன்பது பேரை, 17 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே சிங்களகோம்பையை சேர்ந்தவர் ராஜேஸ், 33. இவர், பொன்னேரி கைகாட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பங்குதாரராகவும், போர்வெல் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருடைய போர்வெல் நிறுவனத்தில், சில

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, அரிசி குடோனில் இருந்து பணத்தை திருடிய சட்டீஸ்கர் மாநில கொள்ளையர்கள் ஒன்பது பேரை, 17 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.


நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே சிங்களகோம்பையை சேர்ந்தவர் ராஜேஸ், 33. இவர், பொன்னேரி கைகாட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பங்குதாரராகவும், போர்வெல் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருடைய போர்வெல் நிறுவனத்தில், சில மாதங்களாக சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒன்பது தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த, 7ல், இரவு சட்டீஸ்கர் மாநில தொழிலாளர்கள், ராஜேஸூக்கு சொந்தமான அரிசி குடோனில் இருந்த ஜன்னல் கம்பியை வளைத்து அங்கிருந்த மூன்று லட்சத்து, 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து கொண்டு டிராவல்ஸ் பஸ்சில் தப்பினர். எருமப்பட்டி போலீசில் மறுநாள் ராஜேஸ் புகாரளித்தார். எருமப்பட்டி எஸ்.ஐ., பூபதி தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடினர். கிருஷ்ணகிரி சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கை செய்த போது பஸ்சில் இருந்த விமல்யாதவ், 22, சேசல்தர்வோ, 27, பிரதீப், 22, சஞ்சய்குமார், 19, ஜீத்கமார்சூரி, 20, தோவானாந்த், 23, துளசிநாத், 22, நாதாலாந்தீம், 28, லட்சுமண சின்னா, 20, ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் கொள்ளையடித்து சென்ற, 17 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X