பொது செய்தி

தமிழ்நாடு

பிக்பாக்கெட் திருடர்களின் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்ட்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கரூர்: பிக்பாக்கெட் திருடர்களின் தலைமை நிலையமாக, ஏ கிரேடு அந்தஸ்து பெற்று கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. தமிழகத்தில் தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள் உள்ள பஸ் ஸ்டாண்டில், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில்

கரூர்: பிக்பாக்கெட் திருடர்களின் தலைமை நிலையமாக, ஏ கிரேடு அந்தஸ்து பெற்று கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. தமிழகத்தில் தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள் உள்ள பஸ் ஸ்டாண்டில், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, பஸ் ஸ்டாண்டில், பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை, இரவு நேரங்களில் பயணிகளை நூதன முறையில், திசை திருப்பி பாக்கெட்டில் உள்ள பணத்தை திருடி செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையத்தில், மின் இணைப்பு இல்லாததால், போலீசார் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதுவே, பிக்பாக்கெட் திருடர்களுக்கு சாதகமாகி விட்டது. இந்நிலையில், கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் புத்தாடைகள் உள்ளிட்ட, பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை வாங்க பஸ்கள் மூலம், கரூர் வருகின்றனர். எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் திருடர்களை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X